இந்தியா மற்றும் இலங்கைக்கான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகைதந்த கப்பல் 16 காலை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.
வருகை தந்த கப்பலை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும்,கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் பால டி சில்வா அவர்களும் வரவேற்றனர்.
மேலும் காங்கேசன்துறை துறைமுகப் பகுதியில் மக்கள் தங்கும் விடுதி, குடிவரவு – குடியகல்வு கட்டிடத் தொகுதியையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்