நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதென்றால் போராட்ட குணம் தேவை.!!
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொது குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு தயாரிப்பாளர் கே.ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “நடிகர் விஜய் மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்கப்படுத்தியது மிக சிறப்பான ஒரு விஷயம்.
ஏனென்றால் எதிர்காலமே மாணவர்கள் கையில் தான் உள்ளது. அதில் ஒரு அரசியல் இருக்கா இல்லையா என்று கேட்டால் கண்டிப்பாக உள்ளது. எனவே இது எதிர்கால அரசியலுக்கான அடித்தளம் தான்.
அரசியல் அழுத்தங்களை எதிர்கொள்ளும் அளவுக்கு அவர் இன்னும் பக்குவப்படவில்லை. நடிகர் விஜய்க்கு கண்டிப்பாக போராட்ட குணம் இல்லை. ஆனால் அரசியலுக்கு வருவதென்றால் போராட்ட குணம் நிச்சயம் தேவை. அவர் இதுவரை எந்த கிராமத்திற்கோ, மாவட்டத்திற்கோ செல்லவில்லை. இதுவரை நேரடியாக மக்களை சந்தித்தது இல்லை. எனவே அது அரசியலுக்கு ஒத்து வராது. ஆளுமை மிக்க விஜயகாந்த் உடன் இருந்து பதவி கொடுத்தவர்களே ஓடிவிட்டனர்.
விஜயகாந்துக்கு தில் உண்டு, ஆனால் விஜய்க்கு இருக்கா என்பது தெரியவில்லை. எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் அவர் போட்டியிடுகிறாரோ இல்லையோ, ஆனால் சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிடுவார். அதுவரை இருக்கும் அரசியல் கட்சியினர் அவரை நிலைகுலைய செய்கிறார்களா அல்லது யாருடனாவது போய் சேரப் போகிறாரா என்பது தற்போது நமக்கு தெரியவில்லை” என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்