சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பட்டிமன்ற பிரபலம்!
பிரபல பட்டிமன்ற பேச்சாளரான பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் அவ்வப்போது சில படங்களிலும் முக்கிய ரோல்களில் தலைக்காட்டி வருகிறார். அதேபோல் சின்னத்திரையிலும் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில தொடர்களில் கெஸ்ட் ரோல்களில் நடித்துள்ளார். அவர் தற்போது ஆனந்தி என்கிற புதிய தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதுவரை கெஸ்ட் ரோல்களில் மட்டுமே கலக்கி கொண்டிருந்த ஞானசம்பந்தம், முதல் முறையாக ஒரு நெடுந்தொடர் முழுவதிலுமே நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.