
சுதிர் பாபு 17வது படத்தின் தலைப்பு இதோ!
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சுதிர் பாபு. லூசர் சீரியஸ் இயக்குனர் அபிலாஷ் ரெட்டி கன்காரா இயக்கத்தில் தனது 17வது படத்தில் நடித்து வருகிறார் சுதிர் பாபு. வி செல்லுலாய்ட்ஸ் , கெம் என்டர்டெயின்மென்ட் இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜெய் கிரிஷ் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு படக்குழுவினர்கள் இப்படத்தின் தலைப்பை அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு 'மா நானா சூப்பர் ஹீரோ' என்ற தலைப்பை டைட்டில் போஸ்டர் உடன் பகிர்ந்துள்ளனர்.