தந்தையர் தினம் கொண்டாட்ட மகிழ்ச்சியில் விஜயகாந்த் மகன்கள்
ஒவ்வொரு குழந்தையின் முதல் ஹீரோ அவர்களின் தந்தை தான். கை பிடித்து நடக்கக் கற்றுக் கொடுத்து, வாழ கற்றுக் கொடுத்து குழந்தைகள் வாழ்வில் முன்னேறுவதை பார்த்து மகிழ்ச்சி அடையும் ஜீவன் தந்தை. அத்தகைய தந்தைகளை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3வது ஞாயிறு கிழமை, தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான தந்தையர் தினம், இன்று (ஜூன் 18) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நடிகர் விஜயகாந்த்-ன் மகன்கள் சண்முகபாண்டியன், விஜயபிரபாகரன் இருவரும் தனது தந்தை விஜயகாந்த் உடன் தந்தையர் தினத்தை கொண்டாடு வகையிலான போட்டோவை தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.