ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தற்போது சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் ஆவதாக சொல்லப்படுகிறது. இதையொட்டி 31 குடோன்களில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு அழைத்து செல்லப்படுகின்றனர். கடந்த 16ஆம் தேதி 72,299 பேர் சாமி தரிசனம் செய்து 3.92 கோடி ரூபாய் அளவிற்கு உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
மாட வீதிகளில் விபத்துகள்இந்நிலையில் திருமலையில் உள்ள மாட வீதிகளில் நிகழும் தொடர் விபத்துகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் APSRTC பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதையடுத்து மேலும் சில விபத்துகள் நடந்துள்ளன. ஆனால் சிறிய காயங்கள் உடன் பக்தர்கள் தப்பித்து கொண்டனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், சாலை போக்குவரத்து கழக மண்டல மேலாளர் ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.ஆகம ஆலோசகர்கள் நடவடிக்கைமறுபுறம் ஆகம ஆலோசகர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஸ்ரீ ஸ்ரீனிவாச சுவாமி மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஆகியோரின் ஆசிகளை பெறும் வகையில் ஹோமம் நடத்த அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் மாட வீதிகளில் விபத்துகள் நடக்காத வண்ணம் தீர்வு காணும் வகையில் பிரத்யேகமான ஒரு விஷயத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கையிலெடுத்தது.மகா சாந்தி ஹோமம்அதாவது, மகா சாந்தி ஹோமம். கீழ் மாட வீதியில் 7வது மைல் தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேய சுவாமி சிலை அருகே மகா சாந்தி ஹோமம் அரங்கேறியது. இந்த யோகத்தை பரிகார யோகம் என்று அழைப்பதாக ஆகம ஆலோசகர் ஸ்ரீ மோகன ரங்காசார்யுலு தெரிவித்தார். பெருந்தொற்று, அச்சமூட்டும் தருணங்கள், எதிர்பாராத அசம்பாவிதங்கள் நிகழும் போது இந்த மகா சாந்தி ஹோமம் நடத்தலாம் எனக் கூறினார்.
அன்னதான ஏற்பாடுகள்இதன்மூலம் பக்தர்கள் பாதுகாப்பாக திருமலை பயணத்தை மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தார். இதன் தொடர்ச்சியாக மற்றொரு முக்கியமான உத்தரவை திருப்பதி தேவஸ்தானம் பிறப்பித்துள்ளது. தற்போது திருமலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் மற்றும் திருப்பதியை ஒட்டி இருக்கும் கோயில்களில் அன்னதானம் வழங்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
SVBC பக்தி தொலைக்காட்சிஇதற்கான நன்கொடையாளர்களின் உதவியை நாடலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதுதவிர தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், SVBC பக்தி தொலைக்காட்சி ஆகியவற்றை பிரபலப்படுத்தும் வேலைகளில் செய்தித் தொடர்பாளர்களும், அதிகாரிகளும் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு ஏழுமலையான் பக்தர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சலாகட்லா வைபோற்சவ கையேடுஇதுதவிர வருடாந்திர சலாகட்லா வைபோற்சவத்தை ஒட்டி ஸ்ரீனிவாச மங்காபுரத்தில் சிறப்பு கையேடுகள் வெளியிடப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானத்தின் இணை செயல் அதிகாரி ஸ்ரீ வீரபிரம்மம் செய்திருந்தார். நடப்பாண்டு ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலில் ஜூன் 24 முதல் 26 வரை சாலகட்லா வைபோற்சவமும், ஜூன் 27ஆம் தேதி பருவேட்ட உத்சவமும் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.