நண்பன் பட பாணியில் ஒரு உண்மை சம்பவம்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ

சென்னை: விஜய் நண்பன் பட காட்சியை மிஞ்சும் வகையில் மருத்துவமனை லிஃப்டிற்குள் ஸ்கூட்டரில் நோயாளி ஒருவர் அழைத்து வந்துள்ளார். இதன் சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

2012ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியானத் திரைப்படம் நண்பன். இந்த படத்தில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, சத்யராஜ், இலியானா ஆகியோர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் இந்தியில் வெளியான த்ரி இடியட்ஸ் திரைப்படத்தின் ரீமேக்காகும்.

நண்பன்: பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது தங்களுடைய விருப்பைத் திணித்து, டாக்டராகவோ, கலெக்டராகவோ ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. இது மிக முக்கியமானதொரு அம்சம். மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதையும் குழந்தைகளை வெறும் புத்தகப் புழுவாக மட்டும் வளர்க்காமல், நல்ல அறிவாளியாக வளர்க்க வேண்டும் என்று பெற்றோருக்கு அறிவுரை கூறிய திரைப்படம் தான் நண்பன்.

Nanban Movie style real incident video trending on social media

ஆல் இஸ் வெல்: இப்படத்தில் நவிஜய்க்கு ஜோடியாக இடையழகி இலியானா இனிமையாக நடித்திருந்தார்.இருக்கானா இடுப்பிருக்கானா…என்ற பாடலுக்கு இடையை வளைத்து நெளித்து ஆடி இருப்பார். மேலும், இந்த படத்தில் பாசிட்டிவா எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள ‘ஆல் இஸ் வெல் ‘ என்ற ஒரு அருமையான வசனம் இருக்கும் அந்த வசனம் இப்போது வரைக்கும் பிரபலமாகவே உள்ளது.

நண்பன் பட பாணியில்: இந்த படத்தில் ஜீவாவின் அப்பாவிற்கு திடீரென உடல்நிலை மோசமாகிவிடும், இதனால்,விஜய் அவரை ஸ்கூட்டரில் வைத்துக்கொண்டு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு வரை அழைத்து செல்வார். இந்த காட்சியை மிஞ்சும் வகையில், ராஜஸ்தானில் ஸ்கூட்டரில் மருத்துவமனையின் லிஃப்டிற்குள் நோயாளியை அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.

Nanban Movie style real incident video trending on social media

தீயாய் பரவும் வீடியோ: ராஜஸ்தானில் காலில் காயமடைந்த மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தந்தை அங்கு சர்க்கர நாற்காலி இல்லாததால், மருத்துவமனையின் லிஃப்ட்டிலும் ஸ்கூட்டரிலேயே சென்றுள்ளார். அவசரம் கருதி மருத்துவமனைக்குள் ஸ்கூட்டரில் வந்ததாக அவர் விளக்கமும் அளித்துள்ளார். இணையத்தில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.