புதைக்கபட இருந்த சவப்பெட்டியை தட்டிய மூதாட்டி: ஒரு வாரத்திற்கு பின் உண்மையில் உயிரிழந்த சம்பவம்


ஈக்வடாரில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட  76 வயது பாட்டி சவப்பெட்டியை தட்டி உயிர் பிழைத்த பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை உண்மையாகவே உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

சவப்பெட்டியை தட்டி உயிர் பிழைத்த பாட்டி

ஈக்வடாரின் பாபாஹோயோ(Babahoyo) நகரத்தை சேர்ந்த 76 வயதான பெல்லா மோன்டோயா (Bella Montoya) என்ற பெண்மணி சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இறுதிச்சடங்கிற்காக சவப்பெட்டியில் அடைக்கப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 5 மணி நேரங்கள் பெல்லா மோன்டோயா சவப்பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில், சவப்பெட்டியில் இருந்து சத்தம் எழுவதை அங்கிருந்த நபர்கள் கவனித்துள்ளார்கள்.

Bella Montoya

இதையடுத்து அவசர அவசரமாக சவப்பெட்டியை திறந்து பார்த்த போது துணியால் சுற்றப்பட்டு இருந்த பெல்லா மோன்டோயா சவப்பெட்டியை தட்டியது தெரியவந்தது.

அத்துடன் அருகில் சென்று உற்று நோக்கிய போது பெல்லா மோன்டோயா மூச்சுக் காற்றுக்காக போராடிக் கொண்டு உயிருடன் இருந்தது உறவினர்கள் 20 பேருக்கும் அதிர்ச்சியளித்தது.

பின் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட 76 வயதான பெல்லா மோன்டோயா நிரந்தர மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டார்.

Bella Montoya

சுமார் 7 நாட்கள் வரை தீவிர சிகிச்சையில் இருந்த பெல்லா மோன்டோயா கடந்த வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவருக்கு முறையான இறுதிச் சடங்குகள் மீண்டும் நடத்தப்பட்டு அதே பொது மயானத்தில் புதைக்கப்பட்டார்.

மருத்துவமனையில் பொலிஸார் விசாரணை

இந்நிலையில் உயிருடன் இருந்த பெண்மணிக்கு எதை அடிப்படையாக கொண்டு  இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது என்பதை விசாரிக்க தனி தொழில்நுட்பம் செயல்பட்டு வருகிறது.மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை எதைக் கொண்டு உயிரிழந்து விட்டதாக அறிவித்தது என்பதையும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

Bella Montoya

இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பாட்டியின் மகன் கில்பர்டோ வழங்கிய தகவலில், உண்மையில் என்ன நடந்தது என்பதற்கான  மருத்துவ அறிக்கைகள் எதயையும் அதிகாரிகள் தனக்கு வழங்கவில்லை  என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக மோன்டோயாவின் சகோதரி, இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவரை அடையாளம் காண முயண்று வருவதாவும், இதற்காக முறைப்படி புகார் அளித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.