
போலோ சங்கர் படத்தின் டப்பிங் துவங்கிய கீர்த்தி சுரேஷ்
கடந்த 2015ம் ஆண்டு சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வெளிவந்த திரைப்படம் வேதாளம். தற்போது இந்த படத்தை நடிகர் சிரஞ்சீவி தெலுங்கில் ரீமேக் செய்து நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் மெகர் ரமேஷ் இயக்குகிறார்.
தமன்னா, கீர்த்தி சுரேஷ், சுஷாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாஹர் மகதி இசையமைக்கும் இந்த படத்தை ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். வருகின்ற ஆகஸ்ட் 11ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் போலோ சங்கர் படத்தின் டப்பிங் துவங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்றும் பகிர்ந்துள்ளார்.