மயிலாடுதுறை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சித்தர் காடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவரின் தாயார் இன்று காலை வீட்டின் வெளிப்புற கதவை திறந்து வெளியே வந்துள்ளார்.
அப்போது வீட்டின் கதவு அருகே மது பாட்டில்கள் சிதறி கிடந்துள்ளது. மேலும் வீட்டின் சுவர்கள் மீது எரிந்த புகை கரியாக படிந்து, அருகில் இருந்த செடிகள் எரிந்த நிலையில் இருந்ததுள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து குமரேசனின் தாயார், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விருந்து வந்த போலீசார் செய்த முதல் கட்ட விசாரணையில், பீர் பாட்டிலில் பெட்ரோலை கலந்து (பெட்ரோல் பாம்) வீட்டின் மீது வீசி மர்ம நபர்கள் வீசி உள்ளது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், முன்விரதம் காரணமாக இந்த பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி, மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.