விருதுநகர்
மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு விருதுநகர் மாவட்ட அளவில் விளையாட்டு வீரர்கள் தேர்வு விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இதில் 75 பேர் கலந்து கொண்டனர். இதில் தேர்வு பெறும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வருகிற 23, 24, 25-ந் தேதிகளில் ஈரோடு மாவட்டத்தில் மாநில அளவில் நடைபெறக்கூடிய போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்கள். இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை பிச்சை மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பிரபாகரன் ராஜசேகர் ஆகியோர் செய்து இருந்தனர்.
Related Tags :