அதீத வெப்ப அலை காரணமாக உத்தரப்பிரதேசம், பீகாரில் கடந்த மூன்று நாட்களில் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் பெரும்பாலான இடங்களில் வழக்கத்திற்கு மாறாக வீசிய வெப்ப அலையால், பல்லியா பகுதியில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சுமார் 400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் அறுபது வயதை கடந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதில், பெரும்பாலானோர் காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சனைக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். இதே போல், பீகாரிலும் தீவிர வெப்பம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 44 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. வெப்ப அலை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.