சென்னை: மாணவர்கள் தங்களது பெற்றோர், வாக்களிக்க பணம் வாங்குவதைத் தடுக்க வேண்டும் என்று நடிகர் விஜய் பேசியதற்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, “வாக்களிக்க பணம் வாங்க வேண்டாம் என்று பேசியது நல்ல விஷயம்தான். விஜய் நல்லதுதானே சொல்லியிருக்கிறார். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதேபோல, அரசியலுக்கு யார் வரவேண்டும், வரக்கூடாது என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை” என்றார்.
இதேபோல, விசிக தலைவர் திருமாவளவன், சமக தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி. உள்ளிட்டோரும் நடிகர் விஜய் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.