2021 சட்டமன்றத் தேர்தலில் விஜய் களமிறங்க உள்ளார் அதற்கான முன்னோட்டம் தான் இந்த கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நிகழ்வில் விஜய் சிறிது நேரமே பேசினாலும் அடுத்ததாக அவரது அரசியல் பாதை எதை நோக்கி இருக்கும் என்பதை அடிக்கோடிட்டு காட்டும் வகையில் இருப்பதாக கூறுகின்றனர்.
அடித்தட்டு மக்களின் பிரதிநிதி அம்பேத்கர்அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி படியுங்கள் என்று மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்தார் விஜய். ஏற்கெனவே அம்பேத்கர் பிறந்தநாளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த தனது ரசிகர்களை கேட்டுக்கொண்ட விஜய் மீண்டும் அம்பேத்கரை முன்னிறுத்துவதன் மூலம் அடித்தட்டு மக்களின் பிரதிநிதியாக தன்னை காட்டிக் கொள்ள முயல்கிறார்.
இந்துத்துவத்துக்கு எதிரான பெரியார்தமிழ்நாட்டில் பெரியார் பெயரை கடந்து அரசியல் பேசிவிட முடியாது. தேர்தல் அரசியலில் பங்கெடுக்காவிட்டாலும் பெரியாரின் அச்சிலேயே தமிழக அரசியல் இப்போதும் சுற்றி வருகிறது. அந்த வகையில் பெரியாரை தூக்கிப் பிடித்து இந்துத்துவ கருத்துக்களுக்கு எதிரான நபராக தன்னைக் காட்டியுள்ளார்.
கல்விக்கு முன்னுரிமை கொடுத்த காமராஜர்தமிழக அரசியல் வரலாற்றில் எளிமைக்கும் மக்கள் பணிக்கும் என்றும் நினைவுகூரப்படுபவராக காமராஜர் இருக்கிறார். கட்சி கடந்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர். கல்விக்கு முக்கியத்துவம் அளித்து ஊர் தோறும் பள்ளிக் கூடங்கள் திறந்தவர். அவரைப் பற்றி மாணவர்கள் படிக்க வேண்டும் என்று கூறியதன் மூலம் காமராஜரின் அரசியலையும் தனக்கு வழிகாட்டியாக விஜய் கொண்டுள்ளார் என்பது தெளிவாகிறது.
அண்ணா, கலைஞர், எம்ஜிஆருக்கு இடமில்லையா?பெரியாரை முன்னிலைப்படுத்திய விஜய் அண்ணாவின் பெயரையோ, கலைஞர் பெயரையோ கூறவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர் திரைத்துறையிலிருந்து வருபவர்கள் தன்னை எம்ஜிஆர் ஆதரவாளராக காட்டிக் கொள்வார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பாக்கியராஜ் என பலரை உதாரணமாகச் சொல்ல முடியும். ஆனால் விஜய் இன்றைய பேச்சில் எம்ஜிஆர் பெயரையும் கவனமாக தவிர்த்துள்ளார்.
தமிழ்த்தேசியத்தை தூக்கிப் பிடிக்காத விஜய்
பெரியார், அம்பேத்கர், காமராஜர் என்று கூறியதன் மூலம் இந்துத்துவ சிந்தனைகளுக்கு எதிரான அரசியலை பேசப் போவதாக அடிக்கோடிட்டு காட்டியுள்ளர் விஜய் என்கிறார்கள். அதேசமயம் தமிழ்த் தேசிய சிந்தனைகளிலும் அவர் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்காக, திராவிட சிந்தனையுடன் விஜய் தனது அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.