வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் நாளை மறுநாள்(20 ம் தேதி)நடைபெறும் ஜகந்நாதர் ரத யாத்திரை 3 டி தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என போலீஸ் அதிகாரி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அகமதாபாத் போலீஸ் கமிஷனர் பிரேம் வீர் சிங் கூறி இருப்பதாவது: குஜராத் மாநிலத்தின் புகழ் பெற்ற ரத யாத்திரையான ஜகந்நாதர் யாத்திரை வரும் 20 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த யாத்திரையில் முதன் முறையாக முழு வழித்தடமும் 3டி மேப்பிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. யாத்திரையின் போது போலீஸ் மற்றும் துணை ராணுவ பிரிவுகளை சேர்ந்தவர்கள் என 26,091 பேர் பாதுகாப்பபு பணியில் ஈடுபடுட உள்ளனர். மேலும் 45 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள 94 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளனர். ரத யாத்திரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு உதவும் வகையில் 32 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்
முன்னதாக யாத்திரையில் போலீசாரின் தயார் நிலை குறித்து மாநில முதல்வர் பூபேந்திர படேல் ஆய்வு நடத்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement