China Woman To Return ₹ 21 Lakh Donation Money After Husband Wakes Up From Coma | கோமாவில் இருந்து மீண்ட கணவர்: நன்கொடையை திருப்பி தர சீன பெண் முடிவு

பெய்ஜிங்: கடந்த 3 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த கணவர் இயல்பு நிலைக்கு திரும்பியதால், சமூக வலைதள விளம்பரம் மூலம் கிடைத்த நன்கொடையை திருப்பி தர சீன பெண் முடிவு செய்துள்ளார்.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வசிப்பவர் ஜியாங் லீ. மனைவி டிங். கடந்த 2020 ம் நடந்த கார் விபத்தில் ஜியங்ங் லீ கோமா நிலைக்கு சென்றார். அவர கவனித்த டிங், செலவுகளுக்காக சேமிப்பு பணம் முழுவதையும் செலவு செய்தார். இதனால் சமூக வலைதளம் மூலம் கணவரின் நிலையை கூறி செலவுக்கு பணம் திரட்டினார் டிங். 4,055 நன்கொடையாளர்கள் மூலம் 26,500 சீன யுவான் ( இந்திய மதிப்பில் ரூ.21 லட்சம்) நன்கொடை திரட்டினார். அவர் இயல்பு நிலைக்கு திரும்புவது கடினம் என டாக்டர்கள் தெரிவித்த போதும், டிங் அவரை அக்கறையுடன் கவனித்து வந்தார். தற்போது, மனைவி கூறுவதை ஜியாங் லீயால் புரிந்து கொள்ள முடிகிறது. நடப்பது, பல் துலக்குவது பேசுவது போன்ற பயிற்சிகளை டிங் அளித்தார். இதனால் இயல்பு நிலைக்கு ஜியாங்க் லீ திரும்பி உள்ளார். இந்த தகவலை சமூக வலைதளத்தில் தெரிவித்து நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள டிங், தான் பெற்ற நன்கொடையையும் திருப்பித்தர முடிவு செய்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.