பெர்லின்: ஜெர்மனியில் காயம்அடைந்த 2வயது குழந்தை அரிஹா ஷாவை, பெற்றோரிடம் ஒப்படைக்க அனுமதி தர, உள்ளூர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த பவேஷ் ஷா, தாரா ஷா தம்பதியினர், 2018ல் ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு வேலை தேடிச் சென்றனர்.
அங்கு, அவர்களுக்கு, 2021ல் அரிஹா ஷா என்ற பெண் குழந்தை பிறந்தது. அரிஹா ஷா, ஏழு மாத குழந்தையாக இருந்தபோது, அதன் பிறப்புறுப்புகளில் காயம் ஏற்பட்டது.
இதற்காக உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சந்தேகம் அடைந்த மருத்துவமனை நிர்வாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்தது.
பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக கூறி, குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில், குழந்தை அரிஹா ஷா ஒப்படைக்கப் பட்டது.
தற்போது இரண்டுவயதாகும் அரிஹா ஷா, அங்குள்ள பாதுகாப்பு மையத்தின் பராமரிப்பிலேயே உள்ளார்.
தங்களுடைய குழந்தையை ஒப்படைக்கும்படி, பவேஷ் ஷா, தாரா ஷா தம்பதியினர் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர். இது தொடர்பாக, மத்திய அரசும், ஜெர்மனி அரசுடன் பேசியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த, பெர்லின் நீதிமன்றம், குழந்தையை அதன் பெற்றோரிடம் ஒப்படைக்க மறுத்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement