ஹூண்டாய் வெர்னா காரின் சக்திவாய்ந்த மாடலாக வரவிருக்கும் வெர்னா N-line செடான் ரக மாடல் சென்னை அருகே சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக விற்பனைக்கு வந்த வெர்னா அமோக வரவேற்பினை பெற்றது.
சர்வதேச அளவில் பல்வேறு மாடல்களின் என்-லைன் எனப்படும் பவர்ஃபுல் மாடல்களை விற்பனை செய்து வரும் நிலையில், இந்திய சந்தையில் புதிய என்-லைன் கார்களை ஹூண்டாய் அறிமுகம் செய்ய தீவர முயற்சி எடுத்துவருகின்றது.
2023 Hyundai Verna N-line
ஹூண்டாய் வெர்னா N-லைன் வேரியண்ட் ஆனது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 160 bhp பவரையும், 253 NM டார்க் வெளிப்படுத்தலாம். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DCT ஆகியவை பெறக்கூடும்.
விற்பனையில் கிடைக்கின்ற வெர்னாவின் மற்ற வகைகளில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன் உள்ளது. இது 115 PS / 143.8 Nm டார்க் உருவாக்குகிறது. இதில் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது IVT கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் என்-லைன் கார்களுக்கு உரித்தான சிவப்பு நிறத்தை பல்வேறு இடங்களில் பெறக்கூடும். விற்பனையில் உள்ள வெர்னா டாப் வேரியண்ட் வசதிகளை பெற்றிருக்கும். டர்போ வகைகளில் பிளாக்-அவுட் அலாய் வீல் கொண்டிருக்கலாம்.
10.25-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கலர் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், கனெக்ட்டிவிட்டி சார்ந்த ஹூண்டாய் புளூலிங்க் வசதி போஸ் பிரீமியம் ஸ்பீக்கர் அமைப்பு, குரல் கட்டளைகள், ஹீட் இருக்கைகள், ஸ்மார்ட் எலக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் ஒருங்கிணைந்த காற்று சுத்திகரிப்பு ஆகியவை
பாதுகாப்பு அம்சங்களில் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், வாகன ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட், முன் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், பின்பக்க ரிவர்ஸ் கேமரா மற்றும் டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை பெற்றதாக விளங்கலாம்.