Indonesian Open Badminton: India Champion | இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன்: முதன்முறையாக இந்தியா சாம்பியன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜகார்த்தா: இந்தோனேஷியா ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்திய ஜோடி சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி ஜோடி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

latest tamil news

இந்தோனேஷியாவில், இந்தோனேஷிய ஓபன் ‛சூப்பர் 1000′ பாட்மின்டன் தொடர் நடந்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி ஜோடி, மலேஷியாவின் ஆரோன் சியா மற்றும் சோய் வூய் யிக் ஜோடியை எதிர்கொண்டது.

latest tamil news

இப்போட்டியில் இந்திய ஜோடி 21 – 17, 21- 18 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இந்திய ஜோடிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.