லண்டன்,-பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில், கெம்பெர்வல் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கேரளாவைச் சேர்ந்த அரவிந்த் சசிகுமார், 38, வசித்து வந்தார்.
இவர், கேரளாவைச் சேர்ந்த மேலும் சிலருடன் இணைந்து வசித்து வந்தார்.
இந்நிலையில், அவருடன் தங்கியிருந்த சல்மான் சலீம், 25, நேற்று முன்தினம் அரவிந்த் சசிகுமாரை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சலீமை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரே வாரத்தில் பிரிட்டனில் மட்டும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று பேர் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளது, அங்கு வசிக்கும் இந்தியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement