ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
லியோ அப்டேட்விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் அன்றைய தினம் லியோ படத்திலிருந்து அப்டேட் வரும் என காத்துக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு வருடமும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அப்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் படத்தில் இருந்து அப்டேட் வெளியாவது வழக்கமான ஒன்றுதான். அதே போல இந்த வருடம் லியோ படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.. அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப தற்போது லியோ படத்தில் இருந்து செம அப்டேட் ஒன்றை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்
நா ரெடிலியோ படத்திலிருந்து விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நா ரெடி என்ற பாடல் வெளியாவதாக அறிவிப்பு வந்துள்ளது. அனிருத்தின் இசையில் செம குத்து பாடலாக இப்பாடல் இருக்கும் என்றும், மேலும் இப்பாடலை விஜய்யே பாடியுள்ளார் என்றும் தகவல்கள் வருகின்றன. இப்பாடலை தான் 2000 நடனக்கலைஞர்களை வைத்து மிகப்பிரமாண்டமாக லோகேஷ் உருவாக்கியுள்ளாராம். எனவே மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலை போல இப்பாடலும் தர லோக்கலான பாடலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் இப்பாடலுடன் விஜய்யின் செம மாஸான ஒரு போஸ்டரும் வெளியாகிவுள்ளது. அந்த போஸ்டர் ஒருபக்கம் வைரலாக இருந்தாலும் மறுபக்கம் சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது
சர்ச்சையான போஸ்டர்லியோ படக்குழு சமீபத்தில் ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. அந்த போஸ்டர் தான் தற்போது சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. விஜய் அந்த போஸ்டரில் புகைபிடிப்பதை போல இருப்பது தான் இந்த சர்ச்சைக்கு காரணமாகும். ரசிகர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை இந்த போஸ்டர் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதே போல தான் விஜய்யின் சர்க்கார் படத்தின் போஸ்டரும் சர்ச்சையை கிளப்பியது. அதிலும் விஜய் புகைபிடிப்பதை போல போஸ்டர் இருந்ததால் பல சர்ச்சைகள் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து தற்போது லியோ படத்திற்கும் அதே பிரச்சனை வந்துள்ளது. இருந்தாலும் விஜய் இந்த போஸ்ட்டரை தவிர்த்திருக்கலாம் என்பதே பொதுவான ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது
ALTER EGO அர்த்தம்என்னதான் அந்த போஸ்டர் ஒருபக்கம் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் மறுபக்கம் செம வைரலாகவும் மாறியுள்ளது. இதையடுத்து அந்த போஸ்ட்டரை ரசிகர்கள் டீகோட் செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த போஸ்டரில் ALTER EGO என்ற ஒரு வார்த்தை இடம்பெற்றுள்ளது. அப்படி என்றால் என்ன என் ரசிகர்கள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தற்போது ALTER EGO என்பதற்கான அர்த்தம் வெளியாகிவுள்ளது. அதாவது ஒரு நபர் தன் அடையாளத்தை மறைத்து வேறொரு நபராக இருந்து வருவது தான் அந்த வார்த்தைக்கு அர்த்தமாம். எனவே இதன் மூலம் லோகேஷ் முழு கதையையும் ஒரே லைனில் கூறியுள்ளார் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்