சென்னை: சன் மியூசிகி, விஜய் டிவி என ரசிகர்களின் ஃபேவரைட்டான விஜேவாக வலம் வரும் மணிமேகலை தனது உடல் எடையை குறைத்தது எப்படி என சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த மணிமேகலை திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கிராமத்தில் சொந்தமாக வீடு கட்டி வரும் மணிமேகலை விருது விழா நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வருகிறார்.
ஃபேவரைட் தொகுப்பாளினி: சன் மியூசிக்கில் விஜேவாக இருந்த போதே மணிமேகலை க்யூட்டாக பேசுவதை கேட்கவே பலரும் அந்த ஷோவுக்கு போன் செய்து பேசுவர். டிடி நீலகண்டன், பிரியங்கா, அர்ச்சனா, விஜே ரம்யா உள்ளிட்ட பல தொகுப்பாளினி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், ஃபேவரைட்டான தொகுப்பாளினியாக விஜே மணிமேகலையும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் முதல் குட்டி குட்டி நிகழ்ச்சிகள் என பலவற்றையும் தொகுத்து வழங்கி வரும் மணிமேகலை விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பண்ண அட்ராசிட்டியை பார்த்து அவருக்கு பலபேர் ரசிகர்களாக மாறினர்.
பண்ணை வீடு கட்டும் மணிமேகலை: விஜே மணிமேகலை தனது கணவருடன் சேர்ந்துக் கொண்டு கிராமத்தில் பண்ணை வீடு ஒன்றை கட்டி வருகிறார். அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடு கட்டும் இடத்தில் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து அடுத்தடுத்து பிரபலங்கள் வெளியேறுவது ஒரு வகை ஸ்டன்ட் என விமர்சிக்கப்பட்டாலும், அதை பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் தனது அடுத்த வேலைகளை கவனமாக செய்து வருகிறார் மணிமேகலை.
21 நாட்களில் குறைந்த உடல் எடை: மணிமேகலை பார்க்க ரொம்பவெல்லாம் குண்டாக இருக்க மாட்டார். ஆனாலும், லேசான தொப்பை போட்டு 65 கிலோ வரை எடை கூடியதால், அவருக்கே சங்கடமாக மாறிவிட்டதாம். அதன் காரணமாக 21 நாட்களில் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சரியான தூக்கம், முன்பு சாப்பிட்ட அதே உணவுகளை சரி பாதியாக குறைத்து விட்டுச் சாப்பிட்டது மற்றும் ஒரு ஆன்லைன் கோர்ஸ் எடுத்துக் கொண்டு அதில், என்ன என்ன உடற்பயிற்சிகளை செய்யச் சொன்னார்களோ அதையெல்லாம் ஒழுங்காக செய்தது தான் மீண்டும் ஃபிட்டான உடல் அமைப்புக்கு தான் வரக் காரணம் எனக் கூறியுள்ளார் மணிமேகலை.