சென்னை பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் சோசியல் மீடியாவில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அதகளம் செய்து வருகிறார் நடிகை பூனம்.
அழகும் திறமையும் இருந்தும்,சரியான கதைகளை தேர்வு செய்யாததால், பாழாய் போன நடிகைகள் பலர். அதில் முண்டியடித்துக்கொண்டு முதலிடம் இருப்பவர் பூனம் பஜ்வா.
தற்போது படவாய்ப்பு இல்லாததால், எப்படியாவது படவாய்ப்பை பெற இணையத்தில் கவர்ச்சி தாண்டவம் ஆடிவருகிறார்.
நடிகை பூனம் பஜ்வா: 2005ம் ஆண்டு வெளியான தெலுங்கு படமான மொடட்டி சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அடுத்தடுத்த படங்களில்: 2008ம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூனம் பஜ்வா நடிகர் ஜீவாவுடன் இணைந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். துரோகி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்தரிக்காய், குப்பத்து ராஜா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
கவர்ச்சி ரூட்: தமிழ்,தெலுங்கு, மலையாள மொழிபடங்களில் கணிசமான படங்களில் நடித்துள்ள பூனம் பஜ்வாய்க்க வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார். அரண்மனை மற்றும் ஜிவி பிரகாஷின் குப்பத்து ராஜா படத்தில் அதீத கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாததால் இன்ஸ்டாகிராமில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை திணறடித்து வருகிறார்.
கிரணுக்கே டஃப்: ஷப்பியாக இருந்த பூனம் பஜ்வா உடல் எடையை குறைத்து தற்போது ஃபிட்டாக இருக்கிறார். வொர்க்கவுட் செய்யும் வீடியோக்களையும் இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 3.3 மில்லியன் ஃபாலோவர்ஸ் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். தற்போது இவர் இன்ட்ஸ்டாகிராமில் குட்டி பனியன், குட்டி டவுசர் போட்டுக்கொண்டு செம ஹாட்டாக மொட்டை மாடியில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த பேன்ஸ், கவர்ச்சியில் கிரணுக்கே டஃப் கொடுப்பீங்க போல என கிண்டலாக கேட்டுவருகின்றனர்.