ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Superstar Rajinikanth: சூப்பர் ஸ்டாருக்காக நடிகை கிரண் ஒரு முடிவுக்கு வர அது குறித்து அறந்த ரஜினியோ அய்யய்யோ என பதறிவிட்டாராம்.
கிரண்ஏ.வி.எம். ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சரண் இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான படம் சீயான் விக்ரமின் ஜெமினி. அந்த படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் கிரண். கொழுக் மொழுக் என்று இருந்த கிரணை தமிழ் ரசிகர்களுக்கு பயங்கரமாக பிடித்துவிட்டது. இதையடுத்து அஜித்தின் வில்லன், கமலின் அன்பே சிவம், பிரசாந்தின் வின்னர் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
விஜய் பேசக் கூடாதுனு சொல்லியும் அதை மேடையில் பேசிய மாணவியின் அப்பா: பத்த வச்சிட்டியே பரட்டைதளபதி விஜய்”பெரியாரை பற்றி படியுங்கள்” நடிகர் விஜய் அட்வைஸ்!பாபா ஹீரோயின் தேடல்ஜெமினி படத்தில் நடிக்க கிரண் கமிட்டாகியிருந்தபோது தான் ரஜினிகாந்தின் பாபா பட வேலை துவங்கியது. கிரண் குறித்து ரஜினியிடம் கூறியிருக்கிறார்கள். அவரையே நம் படத்தில் நடிக்க வைக்கலாம் என்று கூறி கிரணை அணுகி பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். வெளி மாநில பெண்ணாக இருந்தாலும் சூப்பர் ஸ்டாரை பற்றி தெரியாமல் இருக்குமா?. எடுத்த எடுப்பிலேயே ரஜினி படமா என கிரண் இம்பிரஸ்ஸாகிவிட்டாராம்.
பதறிய சூப்பர் ஸ்டார்Fathers day: தந்தையர் தினம்: கோலிவுட்டின் கூல் அப்பாக்கள் ரஜினி, கமல், அஜித், விஜய்…ஜெமினி பட வேலை நடக்கும் அதே நேரத்தில் பாபா படத்தில் எப்படி நடிப்பது என யோசித்தாராம் கிரண். சூப்பர் ஸ்டார் படம் தான் முக்கியம் என்கிற முடிவுக்கு வந்து ஜெமினி படத்திற்காக வாங்கிய முன் பணத்தை திருப்பிக் கொடுக்க முடிவு செய்தாராம். இது குறித்து ரஜினிகாந்துக்கு தெரிய வரவே அவர் பதறிப் போய்விட்டாராம். அதற்கு காரணம் ஏ.வி.எம். நிறுவனம்.
நட்பு தான் முக்கியம்ஏ.வி.எம். நிறுவனத்திற்கும், ரஜினிகாந்துக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. கிரண் மட்டும் முன்பணத்தை திருப்பிக் கொடுத்தால் அந்த நட்பு கெட்டுவிடும் என்று தான் ரஜினி பயந்துவிட்டாராம். நட்புக்கு மரியாதை கொடுக்கும் வகையில் கிரணை அணுகி நீங்கள் ஜெமினி படத்திலேயே நடிங்க என்று கூறிவிட்டாராம். நட்பு பாதித்துவிடக் கூடாது என ரஜினிகாந்த் பதறியடித்தது பற்றி தற்போது பேசப்படுகிறது.
Thalapathy Vijay:அட்ஜஸ்ட் பண்ணாததால் விஜய் பட ஹீரோயின் வாய்ப்பு போச்சு: நடிகை வருத்தம்
ஹீரோயின் தேடல்நட்பை கொண்டாடத் தவறாதவர் ரஜினிகாந்த். அதனால் தான் ஏ.வி.எம். நிறுவனத்துடனான நட்பு தான் முக்கியம் என தன் பாபா படத்திற்கு வேறு ஹீரோயினை தேடிக் கண்டுபிடித்து நடிக்க வைத்திருக்கிறார். படங்களில் மட்டும் அல்ல நிஜத்திலும் எங்கள் தலைவர் அண்ணாமலை தான். நட்புணா எங்கள் தலைவரை மாதிரி இருக்க முடியாது என ரஜினி ரசிகர்கள் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
வரிசை கட்டும் படங்கள்Leo review: விஜய்யின் லியோ கண்டிப்பா பெரிய பிளாக்பஸ்டர் தான்: அனிருத்தின் முதல் விமர்சனம்கெரியரை பொறுத்த வரை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினி. அந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. ஜெயிலரை அடுத்து தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாயாக நடித்திருக்கிறார். அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 32 ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்தும், அமிதாப் பச்சனும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகிறது அந்த படம்.