மும்பை:’ரேப்டீ’ என்ற இரு சக்கர மின்சார வாகன ஸ்டார்ட் அப் நிறுவனம், 85 கோடி ரூபாய் முதலீட்டில், சென்னையில் புதிய தயாரிப்பு ஆலையை துவக்கி உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, முதன்மை தயாரிப்பு ஆலையாக இது செயல்படும்.
இதில், ஆண்டிற்கு 1 லட்சம் வாகனங்கள்தயாரிக்கப்பட உள்ளன. இந்த ஆலையில் தயாரிக்கப்படும் முதல் மின்சார வாகனம், இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என, ரேப்டீ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ரேப்டீ நிறுவனத்தின் இணை நிறுவனர் தினேஷ் அர்ஜுன் கூறியதாவது:
வெறும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக சிறிதாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம், இன்று அசல் உற்பத்தியாளராக மாறும் நிலையை எட்டியுள்ளது.
குறிப்பாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவும், உற்பத்தி பிரிவும் இணைந்து செயல்பட ஏதுவாக ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement