சென்னை: பாக்கியலட்சுமி தொடர் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி. இந்தத் தொடரில் அவர் ராதிகா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து ஜீ தமிழில் சீதாராமன் என்ற தொடரிலும் நடித்து வரும் ரேஷ்மா, சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.
இவர் தனது உதட்டை பெரிதாக்க சர்ஜரி செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு தற்போது தனது சமீபத்திய பேட்டியில் பதிலளித்துள்ளார் ரேஷ்மா.
லிப் சர்ஜரி குறித்த கமெண்ட்டிற்கு ரேஷ்மா காட்டம்: சன் தொலைக்காட்சியில் ஆங்கராக தன்னுடைய பயணத்தை துவங்கியவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் பிரபல நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி. ஆங்கரிங் மூலம் வம்சம், வாணி ராணி போன்ற தொடர்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற ரேஷ்மா தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இவர் ஏற்று நடித்த புஷ்பா கேரக்டர் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
படத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால், ரேஷ்மாவை திருமணம் செய்யும் சூரி, அதன்மூலம் படும் பாடுகளை இந்தப் படம் நகைச்சுவையாக கூறியிருந்தது. இந்தப் படத்தில் சூரி, புஷ்பா புருஷன் என்றே அழைக்கப்படுவார்.தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்த ரேஷ்மா, வெப் தொடர்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஆனாலும் சினிமாவில் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்புகள் அமையாத நிலையில், தற்போது சீரியல்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் நாயகன் கோபியின் இரண்டாவது மனைவி ராதிகாவாக அதிரடி காட்டி வருகிறார் ரேஷ்மா. நீண்ட தயக்கத்திற்கு பிறகு தனக்கு அமைந்த இரண்டாவது வாழ்க்கையையும் தான் தொலைக்கும் நிலை வருமோ என்ற கோணத்தில் இந்த கேரக்டர் யோசிப்பதாக இதன் காட்சி அமைப்புகள் காணப்படுகின்றன. இதனால் இந்த கேரக்டர் அவ்வப்போது வில்லத்தனத்திலும் ஈடுபடுவதாக காட்டப்படுகிறது.
சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார் ரேஷ்மா. தொடர்ந்து கவர்ச்சி தூக்கலான போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்தப் புகைப்படங்கள் அவருக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோயர்களை கொடுத்துள்ளது. மேலும் தனது சமீபத்திய பேட்டியில் தான் குண்டாக மாறியதால் தன்னை பலரும் பாடி ஷேமிங் செய்து வருவதாக காட்டம் தெரிவித்துள்ளார்.
தன்னை விமர்சிப்பவர்களுக்கு தன்னுடைய உடலில் உள்ள மெடிக்கல் பிரச்சினைகள் குறித்து தெரியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தன்னுடைய உதடை பெரிதாக்க தான் சர்ஜரி செய்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளதாகவும் கூறியுள்ள ரேஷ்மா, அப்படியே செய்தாலும் அது தன்னுடைய இஷ்டம் என்றும் தனக்கு பிடித்ததை செய்வதில் மற்றவர்களுக்கு என்ன கஷ்டம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.