ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
சினிமா துறையில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக சில பிரபல நடிகைகளே தெரிவித்துள்ளனர். தன்னை அட்ஜஸ்ட் பண்ணச் சொன்னார் ஒரு பிரபலம் என லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவே பேட்டி ஒன்றில் தெரிவித்தார். நயன்தாராவுக்கே இந்த நிலைமையா என ரசிகர்கள் வியந்தார்கள்.
“பெரியாரை பற்றி படியுங்கள்” நடிகர் விஜய் அட்வைஸ்!
இந்நிலையில் நடிகை பாலாம்பிகாவும் அட்ஜஸ்ட் பண்ணுவது பற்றி பேசியிருக்கிறார்.
தம்பிக்கு ஒரு பாட்டு படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்தவர் பாலாம்பிகா. அந்த படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். பிரபல இயக்குநரான கே.எஸ். கோபாலகிருஷ்ணனிடம் உதவியாளராக இருந்த என் அப்பாவுக்கு நான் நடிகையாக வேண்டும் என ஆசை என பாலாம்பிகா தெரிவித்துள்ளார்.
அவர் ஷகீலாவின் பேட்டியில் மேலும் கூறியதாவது,
தொடர்ந்து ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் வந்தது. ஆனால் அந்த வாய்ப்புகள் வேண்டாம் என என் அப்பா சொன்னார். விஜய் மற்றும் பிரசாந்த் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அட்ஜஸ்ட் செய்தால் தான் விஜய், பிரசாந்த் படங்களில் நடிக்க முடியும் என்கிற நிலைமை. அப்படி ஒன்றும் நீ அட்ஜஸ்ட் செய்து நடிக்க வேண்டாம் என அப்பா கறாராக சொல்லிவிட்டார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
விஜய் பட வாய்ப்பை மிஸ் செய்துவிட்டேன். அவருடன் சேர்ந்து நடித்திருந்தால் இன்று என் நிலைமையே வேறு மாதிரி இருந்திருக்கும் என்றார்.
பாலாம்பிகா சில டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். விஜய் படத்திற்காக பாலாம்பிகாவை யார் அட்ஜஸ்ட் செய்யச் சொன்னார்கள் என்பதை அவர் தெரிவிக்க வேண்டும் என தளபதி ரசிகர்கள் கூறியுள்ளனர்.
சினிமா பின்னணி இல்லாமல் வருபவர்களை மட்டும் அல்ல வாரிசு நடிகைகளையும் கூட பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள் என வரலட்சுமி சரத்குமார் முன்பு தெரிவித்தார். என் அப்பா பிரபல நடிகராக இருந்துமே என்னை அட்ஜஸ்ட் பண்ணச் சொன்னார்கள். அப்படி ஒரு வாய்ப்பு வேண்டாம் என கூறிவிட்டேன் என வரலட்சுமி மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் தன்னை அட்ஜஸ்ட் பண்ணச் சொன்னார்கள் என பாலாம்பிகா கூறியிருக்கிறார். பாலாம்பிகா தெரிவித்ததை பார்த்தவர்களோ, பாடகி சின்மயியிடம் கூறுங்கள். அவர் உங்களுக்காகவும் சேர்த்து நியாயம் கேட்பார். ஏற்கனவே பலருக்காக குரல் கொடுத்து வருகிறார் என தெரிவித்துள்ளனர்.
Vijay: 12 மணிநேரம் கால் கடுக்க நின்ற விஜய்: ஸ்மைல், கண்ணீர், தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தளபதி
10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியரை விஜய் கவுரவித்துள்ளார். ரூ. 2 கோடி செலவு செய்து 12 மணிநேரம் நடந்த அந்த நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
12 மணிநேரமாக விஜய் மேடையில் நின்றதை பற்றி பலரும் வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அட்ஜஸ்ட் பண்ணாததால் விஜய் பட வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது என பாலாம்பிகா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் பேசக் கூடாதுனு சொல்லியும் அதை மேடையில் பேசிய மாணவியின் அப்பா: பத்த வச்சிட்டியே பரட்டை
பட வாய்ப்புக்காக நடிகைகளை மட்டும் அல்ல நடிகர்களையும் படுக்கைக்கு அழைக்கும் பழக்கமும் இருக்கிறது. அதை பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், தேசிய விருது வென்ற நடிகர் ஆயுஷ்மான் குரானா ஆகியோர் வெளிப்படையாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.