ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முதன்மையானவராக வலம் வருபவர் தான் விஜய். தளபதியாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள விஜய் தற்போது லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் நடித்து வருகின்றார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
விரைவில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக துவங்கவுள்ளது. இதையடுத்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தை AGS நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது. லியோ படப்பிடிப்பை முடித்துவிட்டு தளபதி 68 படவேலைகளை விஜய் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Leo first single: லியோ போஸ்டரில் இவ்ளோ விஷயம் இருக்கா ..டீகோட் செய்த ரசிகர்கள்..போஸ்டரிலேயே ட்விஸ்ட் வைத்த லோகேஷ்..!
இந்நிலையில் இவ்வாறு செம பிசியாக இருந்து வரும் விஜய் சமீபத்தில் செய்த ஒரு காரியம் தான் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது. அதாவது தன் மக்கள் இயக்கம் சார்பாக பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விஜய் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். இவரின் இந்த செயலை பார்த்து மக்கள் அனைவரும் விஜய்யை புகழ்ந்து வருகின்றது.
விஜய் கொடுத்த ஊக்கத்தொகை
கிட்டத்தட்ட 12 மணிநேரத்திற்கு மேலாக விஜய் மேடையில் நின்றுகொண்டு மாணவர்கள் அனைவரிடமும் சிரித்து பேசி ஊக்கத்தொகை வழங்கி அவர்களை மகிழ்வித்தார். மேலும் வாழ்க்கையில் படிப்பு எந்த அளவிற்கு முக்கியம் என்பதை எடுத்துக்கூறும் விதமாக அவர்களிடம் உரையாடினார் விஜய்.
இந்த செயலை பார்த்து திரையுலகம் உட்பட அரசியல் தலைவர்களும் விஜய்யை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் விஜய் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வழங்கிய ஊக்கத்தொகை பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
அதன்படி முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ருபாய் 25 ஆயிரமும், இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 15 ஆயிரமும், மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 10 ஆயிரமும் பரிசு தொகையாக வழங்கினார் விஜய். மேலும் 600 /600 மதிப்பெண் பெற்ற நந்தினி என்ற மாணவிக்கு விஜய் வைர நெக்லஸ் வழங்கினார்.
வெளியான முழு விவரம்
இந்நிலையில் தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதையடுத்து விஜய்யிடம் இருந்து பரிசு பெற்ற மாணவர்கள் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுஒருபக்கம் இருக்க விஜய் இவ்வாறு செய்தது மற்ற மாணவர்களையும் அதிக மதிப்பெண் பெற ஊக்குவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.