புதுடெல்லி: இந்திய உளவு அமைப்பான ரா-வின் அடுத்த தலைவராக ரவி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
ராவின் தற்போதைய தலைவரான சமந்த் கோயலின் பதவிக் காலம் இம்மாதம் 30-ம் தேதியோடு நிறைவடைகிறது. இதன் காரணமாக, அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான அமைச்சரவைக் கூட்டம் கூடியது. இதில், ராவின் அடுத்த தலைவராக ரவி சின்ஹாவை தேர்வு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ஜூலை 1-ம் தேதி ராவின் புதிய தலைவராக ரவி சின்ஹா பதவியேற்க இருக்கிறார்.
1988-ம் ஆண்டு சத்தீஸ்கர் கேடர் ஐபிஎஸ் அதிகாரியான ரவி சின்ஹா, தற்போது அமைச்சரவை செயலகத்தின் சிறப்புச் செயலராக இருந்து வருகிறார். பதவி ஏற்றதில் இருந்து இரண்டு ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை ராவின் தலைவராக தொடர்வார்.