சென்னையில் இன்று இரவு மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை மழை
சென்னையில் 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள்தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சென்னையின் முக்கிய பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. வளசரவாக்கம், போரூர், வடபழனி, கோடம்பாக்கம், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய பகுதிகளில் கொட்டி வரும் மழையால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.
திடீர் மழையால் பாதிப்பு
மேலும் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேங்கிய மழை நீரை அகற்றும் பணி மற்றும் மரங்களை அகற்றும் பணியும் விரைவாக நடைபெற்று வருகிறது. சென்னையின் பல பகுதிகளில் இடியுடன் தற்போதும் மழை பெய்து வருகிறது. திடீரென பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று எப்படி இருக்கும்?
இந்நிலையில் இன்று மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தனியார் வானிலை அமைப்பான சென்னை ரெய்ன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதன்படி, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடைசியாக பெய்த மழை, ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மெதுவாக நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பதிவிட்டுள்ளது.
சென்னை ரெய்ன்ஸ்
பகல் பொழுதில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சூரியனும் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் என்றும் தெரிவித்துள்ளார். பின்னர் மீண்டும் லேட் நைட்டில் அடித்து துவைக்கும் என்றும், இன்று இரவு எப்படி மாறும் என்று பார்க்கலாம் என்றும் சென்னை ரெய்ன்ஸ் அமைப்பு பதிவிட்டுள்ளது.
அடித்து துவைக்கும்மேலும் சென்னையை நோக்கி வரும் மேகக்கூட்டங்கள் குறித்த புகைப்படத்தையும் சென்னை ரெய்ன்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. சென்னை ரெய்ன்ஸ் அமைப்பின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், அப்போ இன்று இரவும் மழை வச்சு செய்யுமா என கேட்டு வருகின்றனர். தற்போதும் சென்னையின் பல பகுதிகளில் கனமழை கொட்டி வருவது குறிப்பிடத்தக்கது.இன்று இரவுஇடி மின்னல்