12 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த கார்கள்: உங்களுக்கு புதிய கார் வாங்கும் எண்ணம் உள்ளதா? உங்கள் பட்ஜெட் சுமார் ரூ.12 லட்சம் வரை உள்ளதா? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். மிகவும் பிரபலமான மற்றும் உங்கள் பட்ஜெட்டில் வரக்கூடிய சில கார்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
டொயோட்டா ஹைரைடர்
டொயோட்டா ஹைரைடர் (Toyota HiRider) இரண்டு பெட்ரோல் பவர்டிரெய்ன் விருப்பங்களுடன் கிடைக்கிறது. இதில் 1.5 லிட்டர் மைல்ட்-ஹைப்ரிட் அமைப்பு (103PS/137Nm) கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 116 ps ஆற்றலை உருவாக்கும் வலுவான-ஹைப்ரிட் அமைப்பு ஆகியவை உள்ளன. இதில் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் உள்ளது. இது முன் சக்கர டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் உள்ளமைவு விருப்பங்களில் வருகிறது. மேலும், இதில் சிஎன்ஜி ஆப்ஷன் உள்ளது. இந்த காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 10.73 லட்சம் ஆகும்.
ஹூண்டாய் வென்யூ
ஹூண்டாய் வென்யூவில் 3 எஞ்சின் விருப்பங்கள் கிடைக்கின்றன. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் (83PS/114Nm) எஞ்சினுடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், ஒரு 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் (120PS/172Nm) இன்ஜினுடன் 6-ஸ்பீடு iMT அல்லது 7-ஸ்பீட் டிசிடி மற்றும் ஒரு மேம்படுத்தப்பட்ட 1.5-லிட்டர் டீசல் (116PS/250Nm) இன்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுக்கான ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 7.72 லட்சம் ஆகும்.
மாருதி பிரெஸ்ஸா
இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது, இது 103PS/137Nm வெளியீடுகளை உருவாக்குகிறது. இதில் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுக்கான விருப்பம் கிடைக்கிறது. அதன் சிஎன்ஜி பதிப்பில் 88PS/121.5Nm இன் வெளியீட்டைப் பெறுகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 8.19 லட்சம் ஆகும்.
டாடா நெக்ஸான்
நாட்டின் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றான டாடா நெக்ஸான் இரண்டு இன்ஜின் விருப்பங்களுடன் வருகிறது. இதில் ஒரு 1.2-லிட்டர், 3-சிலிண்டர், டர்போ-பெட்ரோல் யூனிட் 120PS மற்றும் 170Nm வெளியீடுகளை உருவாக்குகிறது. மற்றொரு 1.5-லிட்டர், 4- சிலிண்டர்., டீசல் எஞ்சின், 115PS மற்றும் 260Nm வெளியீட்டை உருவாக்குகிறது. இரண்டு என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு AMT ஆப்ஷனைப் பெறுகின்றன. இந்த காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 7.80 லட்சம் ஆகும்.
மாருதி சியாஸ்
வசதியான நீண்ட பயணங்களை விரும்புபவர்கள் இந்த காரை வாங்கலாம். இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது 105PS/138Nm அவுட்புட்களை உருவாக்குகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வைப் பெறுகிறது. இதனுடன், பல அம்சங்களும் இதில் உள்ளன. இந்த காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 9.30 லட்சம் ஆகும்.
கூடுதல் தகவல்
பிரபல வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் தனது டியாகோ (Tiago), டிகோர் (Tigor), அல்ட்ராஸ் (Altroz), ஹேரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) போன்ற மாடல்களின் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி வகைகளில் ஜூன் 2023 இல் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இருப்பினும், இந்த சலுகையில் பஞ்ச் மற்றும் நெக்ஸான் எஸ்யூவி -கள் சேர்க்கப்படவில்லை.