போபால்: மத்திய பிரதேசத்தில் கேட்போரை நடுங்க வைக்கும் அளவுக்கு கொடூரமான ஆணவக் கொலை நடந்துள்ளது.
மொரேனா மாவட்டத்தில் உள்ள ரத்னபாஷி என்ற கிராமத்தில் பெற்றவர்களின் எதிர்ப்பை மீறி காதலித்த பெண் மற்றும் அவரது காதலனை பெண்ணின் குடும்பத்தினர் சுட்டுக் கொலை செய்து, அவர்களின் உடலை கட்டி முதலைகள் அதிகம் இருக்கும் ஆற்றில் வீசி இருக்கிறார்கள்.
பெற்றோரின் எதிர்ப்பை மீறி, சாதி மீறி திருமணம் செய்வோர் மீது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே அடக்குமுறைகள் ஏவப்படுகிறது.
குறிப்பாக பட்டியல் இன பெண்கள் உயர் சாதி ஆண்களை திருமணம் செய்யும் போதும், பட்டியல் இன ஆண்கள் உயர் சாதி பெண்களை திருமணம் செய்யும் போதும் சாதிய அடக்குமுறைகள் மிக மோசமாக நடக்கின்றன. தாங்கள் பெண் ஜீரணிக்க முடியாத விஷயத்தை செய்தது போலவோ, தங்கள் மகன் ஏற்கவே முடியாத விஷயத்தை செய்ததாக சாதியவாத சிந்தையுடன் பெற்றோர்கள் எதிர்ப்பது நடக்கிறது.
தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை பெருங்குற்றம், தீண்டாமை மனித தன்மையற்ற செயல் என தினமும் பள்ளிகளில் எடுத்த உறுதிமொழிகள் மனதளவில் சொல்கிறார்களா சிலர்? என்ற கேள்விகள் எழாமல் இல்லை.
நடுரோட்டில் கழுத்தறுத்துக் கொல்வது, ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிட்டு கொல்வது, பட்டப்பகலில் பல பேர் முன்னிலையில் ஓட ஓட விரட்டிக் கொல்வது, திட்டமிட்டு சுட்டுக்கொல்வது என பல ஆணவக்கொலைகள் கடந்த சில ஆண்டுகள் இந்தியாவில் நடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான வழக்கின் வரலாற்றை பார்த்தால் பட்டியல் இன பெண் அல்லது பட்டியல் இன ஆண்கள் சாதி மாறி திருமணம் செய்ததற்காக கொல்லப்பட்டிருப்பார்கள்.
பல திரைப்படங்கள் கலப்பு திருமணத்தை ஆதரித்தும், சாதிமறுப்பை ஊக்குவித்து எடுத்தாலும், மக்களில் பலர் சாதிய மனநிலையில் இருந்து வெளிவருவதே இல்லை. அதற்கு காரணம், தங்கள் சாதி பெண்ணை , பட்டியல் இன ஆண்கள் திருமண செய்வதை ஏற்க விரும்பாததே ஆகும்,.
சரி விஷயத்திற்கு வருவோம்.. மத்திய பிரதேசத்தில் மொரேனா என்ற மாவட்டத்தில் ரத்னபாஷி பகுதியைச் சேர்ந்த ஷிவானி தோமர்(வயது 18) என்ற பெண்ணும், அந்த கிராமத்தின் பக்கத்து ஊரான பலபு என்ற கிராமத்தைச் சேர்ந்த ராதிஷ்யா தோமர் (21 வயது) என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளார்கள்,.
இவர்களின் காதலனுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். எனினும் இவர்கள் தங்கள் காதலை தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் காதலர்கள் கடந்த ஜூன் 3 மற்றும் ஜூன் 4ம் தேதிகளில் அடுத்தடுத்து மாயம் ஆகினர்.
இது தொடர்பாக இரு வீட்டினரும் அடுத்தடுத்து புகார் தெரிவித்தனர்
மொரேனா மாவட்டத்தின் காவல்துறை அதிகாரி பர்மல் சிங் மெஹ்ரா கூறுகையில், பெண்ணின் தந்தை ராஜ்பால் சிங் தோமர் ஜூன் 3 ஆம் தேதி அம்பாஹ் காவல் நிலையத்தில் ஷிவானியைப் பற்றி காணவில்லை என்று புகார் அளித்தார், ராதிஷ்யாமின் குடும்பத்தினர் அதே காவல் நிலையத்தில் இதேபோன்ற புகாரை அடுத்த நாள் அளித்தார். அப்போது இருகுடும்பத்திடமும் நாங்கள் விசாரணை நடத்தினோம் . விசாரணையில் ஷிவானியின் தந்தை ராஜ்பால் சிங் தோமர் கொன்றதை ஒப்புக்கொண்டார்.
மொரேனா மாவட்டத்தில் உள்ள ரத்னபாஷி என்ற கிராமத்தில் தனது மகளையும் மற்றும் அவரது காதலனை சுட்டுக் கொலை செய்து, அவர்களின் உடலை கட்டி முதலைகள் அதிகம் இருக்கும் ஆற்றில் வீசியதை அவர் ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக ராதிஷ்யாமின் குடும்பத்தினரின் கூறும் போது, ராதிஷ்யாவும் ஷிவானியும் கடந்த மாதம் வீட்டை விட்டு ஓடிவிட்டனர், பின்னர் அவர்கள் அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர். ஜூன் 1 ஆம் தேதி, ஷிவானியின் தந்தை ராதிஷ்யாமின் குடும்பத்தை அழைத்து வந்து நயவஞ்சகமாக கொலை செய்தது எங்களுக்கு தெரியவந்தது என்றார்கள்.