சென்னை: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ரசிகர்களுடன் சேர்ந்து வெறித்தனமாக ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இயக்குநர் கௌதம் மேனன் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இவரது படங்களில் ரொமான்ஸ், த்ரில்லிங் என அனைத்தும் கலந்து பார்வையாளர்களை கட்டிப்போட்டுவிடும்.
திரைக்கதையிலும் தன்னுடைய படங்களை சிறப்பாக பார்வையாளர்களுக்கு கடத்துவதில் கௌதம் மேனனுக்கு நிகர் அவர் மட்டும் தான்.
வெந்துதணிந்தது காடு: கௌதம் வாசுதேவ் மேனன் கடந்த ஆண்டு இறுதியில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை சிறப்பான வகையில் இயக்கியிருந்தார. சிம்புவின் வித்தியாசமான பரிணாமத்தை கொடுத்திருந்தது இந்தப் படம். சித்தி இத்னானி, ராதிகா உள்ளிட்டவர்கள் நடிப்பில் இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்தது.
லியோ படத்தில் : அடுத்தடுத்த படங்களிலும் நடிகராக தன்னை இணைத்துவரும் கௌதம் மேனன் விஜய்யின் லியோ படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இயக்குநராக மாஸ் காதல் படங்களை கொடுத்து வந்த கௌதம் மேனன், நடிகர் அவதாரம் எடுத்து அடுத்தடுத்த படங்களில் அதிரடியான வில்லானாக நடித்து வருகிறார்.
செம டான்ஸ்: இந்நிலையில், சென்னையில் நேற்று ஹரிஷ் ஜெயராஜ் கச்சேரி நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் கௌதம் மேனன், ஹாரிஸ் இசையமைத்த அனேகன் படத்திலிருந்து டங்காமாரி ஊதாரி பாடலுக்கு ரசிகர்களுடன் சேர்ந்து சும்மா வெறித்தனமாக குத்தாட்டம் போட்டார் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இனி ஹீரோதான்: கௌதம் மேனன் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால், இனி படத்தை இயக்கமாட்டாரா என்ற தகவலை ரசிகர்களுக்கு இருக்கும் நிலையில், தற்போது கௌதம் மேனனின் வெறித்தனமாக டான்சை பார்த்த ரசிகர்கள், மனுஷன் சும்மா வெறித்தனமா ஆடுகிறார் என்றும், அடுத்து கதாநாயகனாக நடிச்சாலும் நடிப்பார் என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
துருவ நட்சத்திரம்: கௌதம் மேனனின் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் நீண்ட நாட்களாக உள்ளது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ள சூழலில் படம் எப்போது ரிலீசாகும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.