தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… பீலா ராஜேஷ் முதல் ஆர்.கண்ணன் வரை… முழு விவரம் இதோ!

தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் இன்று (ஜூன் 19) பிறப்பித்துள்ள அரசாணையில், சிறப்பு திட்ட செயலாக்கத்துறைக்கு கூடுதல் தலைமை செயலாளர் என்ற பதவி தற்காலிகமாக உருவாக்கப்படுகிறது. இதேபோல் எரிசக்தி துறைக்கு முதன்மை செயலாளர் என்ற பதவி தற்காலிகமாக உருவாக்கப்படுகிறது. இவை இரண்டும் ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும். இல்லையெனில் தேவைப்படும் காலம் வரை பயன்பாட்டில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி ஜோதி நிர்மலா பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

பீலா ராஜேஷ் ஐஏஎஸ் – எரிசக்தி துறை முதன்மை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே நில சீர்திருத்தத் துறை முதன்மை செயலாளராக பதவி வகித்தார்.

ரமேஷ் சந்த் மீனா ஐஏஎஸ் – சிறப்பு திட்ட அமலாக்கத்துறை கூடுதல் தலைமை செயலாளராக மாற்றம் செய்யப்படுகிறார். இவர் ஏற்கனவே எரிசக்தி துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்தார்.

வீர் பிரதாப் சிங் ஐஏஎஸ் – வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சியின் கூடுதல் ஆட்சியராக பதவி வகித்தார்.

விஜய ராணி ஐஏஎஸ் – கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். இவர் ஏற்கனவே சேலம் மாவட்டம் பட்டு வளர்ப்பு துறை இயக்குநராக இருந்தார்.

ஆசியா மரியம் ஐஏஎஸ் – சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னதாக தமிழ்நாடு எரிசக்தி மேலாண் ஏஜென்சியின் மேலாண் இயக்குநராக இருந்தார்.

சந்திரசேகர் சகாமுரி ஐஏஎஸ் – சேலம் மாவட்ட பட்டு வளர்ப்பு துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கிராமப்புற மேலாண்மை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இணை செயலாளராக பதவி வகித்தார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

விஜயகுமார் ஐஏஎஸ் – தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதியத்தின் முதன்மை செயலாளராக நியமிக்கப்படுகிறார். மேலும் அடையாறு – கூவம் ஒருங்கிணைந்த மறுசீரமைப்பு திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வகிப்பார். இவர் முன்னதாக தமிழ்நாடு சிறு தொழில் கழகத்தின் மேலாண் இயக்குநராக இருந்தார்.

சுவர்ணா ஐஏஎஸ் – தமிழ்நாடு சிறு தொழில் கழகத்தின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதியத்தின் முதன்மை செயலாளராக இருந்தார்.

ஆர்.கண்ணன் ஐஏஎஸ் – தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ரஞ்சித் சிங் ஐஏஎஸ் – நாகப்பட்டினம் மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சியின் கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அலமேலு மங்கை ஐஏஎஸ் – சேலம் மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சியின் கூடுதல் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சுரேஷ் குமார் ஐஏஎஸ் – தமிழ்நாடு காதி மற்றும் கிராமப்புற தொழில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.