சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அடுத்த 2 தினங்களுக்கு மழை தொடரும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடலூர், கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தமிழக கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.