நான் 'பொம்மை' தயாரிப்பாளர்…: எஸ்.ஜே.சூர்யா பளிச்
தமிழ் சினிமாவில் சின்ன சின்னதாய் தலைகாட்டி, குஷி, வாலி என்ற படங்களை இயக்கி, 'இருக்கு… ஆனால் இல்லை'… என்ற வசனம் பேசி நடிகனாகவும் அவதாரம் எடுத்து தமிழ் திரையை கலக்கி வரும் எஸ்.ஜே. சூர்யா தன் 'பொம்மை' படம் குறித்து மனம் திறக்கிறார்…
தயாரிப்பாளராக நடிகராக 'பொம்மை' படம் குறித்து
மேனி குயிர் என்ற பெயின்டர் கேரக்டரில் நடிச்சிருக்கேன். வெள்ளையா ஒரு சிலை செய்வாங்க. அந்த சிலைக்கு கண்ணு, மூக்கு, புருவங்கள், உதடு எல்லாம் நான் வரையிற மாதிரி கேரக்டர். திரில்லர், காதல் கலந்த கதையாக இருந்ததால் தயாரித்துள்ளேன்.
இப்படி ஒரு கதையை ராதா மோகன் இயக்கியது எப்படி
நார்வே சென்ற போது கடைக்கு போயிருக்கார். ஒரு பெண் இவரை பார்த்திருக்கு… என்ன நம்மல பார்க்குதுனு கிட்ட போய் பார்த்தால் பொம்மை. அங்கே தான் பொம்மை படம் ஐடியா வந்திருக்கு. நாயகியாக பிரியா பவானி சங்கர் சூப்பராக பொருந்தியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் உங்கள் கனவு நிஜமாகியிருக்கா
இல்லை… கனவை நோக்கிய பாதையில் போயிட்டு இருக்கேன். விஜய் கூட 'கிட்ட வந்துட்டீங்க சூர்யா, இன்னும் கொஞ்ச துாரம் பிடிச்சிடலாம்'னு சொன்னாரு. நடிகனாக மக்களை சந்தோஷப்படுத்துவது என் சந்தோஷம்.
நீங்கள் எப்படி பட தயாரிப்பாளராக சமாளித்தீர்கள்
'நான் குடுத்த பால் ரத்தமாக போகுதே' என்ற 'தேவர் மகன்' பட வசனம் போல் என் சம்பளம் எல்லாம் இந்த படத்தோட வட்டிக்கு போனது. சினிமாவில் வரும் காசு சினிமாவுக்கே போகும்
யுவன் சங்கர் ராஜா இசை, எஸ்.ஜே. சூர்யா காம்பினேஷன்
எப்பவுமே பெஸ்ட். கள்வனின் காதலி, நெஞ்சம் மறப்பதில்லை, மாநாடு, பொம்மை, கெஸ்ட் ரோலில் நடித்த 'வை ராஜா வை' பாட்டு என சிறப்பான இசையும் எனக்கு யுவன் கொடுத்து இருக்கார். பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார்.
தெலுங்கு மார்க்கெட் எப்படி இருக்கு தெலுங்கு பேச வருமா
தெலுங்கில் எனக்கு வசதியான படத்தில் தான் நடிக்கிறேன். தெலுங்கில் 'மாநாடு', 'டான்' படத்திற்கு டப்பிங் பேசினேன்.
'வியாபாரி' உட்பட சில படங்கள் நல்லா ஓடலயே
சரியான தோல்வி… 8 ஆண்டுகள் கீழே விழுந்து கிடந்தேன். சூர்யா சாப்டர் குளோஸ்ன்னு சொல்ற அளவு போயிட்டேன். விழுந்து எழுந்து வந்திருக்கேன்.
எப்படி உங்களுக்குனு ஒரு ஸ்டைல பிடிச்சீங்க
போராடி ஒரு விஷயத்தை எனக்குன்னு ஒரு ஸ்டைல் கொண்டு வந்தேன். பண்பட்டு கற்றுக் கொண்டு நடித்தேன் .
புதிய இயக்குனர்களோடு வேலை பார்ப்பது எப்படி இருக்கு
சினிமால சீனியர், ஜூனியர் இல்லை. படைப்பாளி நினைத்த கேரக்டரை நடிப்பில் கொண்டு வந்தால் அது கடவுள் ஆசிர்வாதம்னு நினைப்பேன்.
புதிய இயக்குனர்களே ரஜினி, கமல் வைத்து இயக்குகிறார்களே
இப்போ கூட என்னால் படம் இயக்க முடியும். அவர்களை சம்மதிக்க வைத்து கதை சொல்ல முடியும். நான் தானே இயக்கம் வேண்டாம்னு இருக்கேன்.
இதுவரை திருமணம் குறித்து நீங்கள் ஏன் யோசிக்கவில்லை
எனக்கும் காதல் எல்லாம் வந்து போயிருக்கு… ஆனால், இப்போ மார்க் ஆண்டனி, ஜிகர் தண்டா 2, உட்பட 5 படம் நடிக்கிறேன். இப்போ எதையும் யோசிக்க முடியலை. 4 மணி நேரம் தான் துாங்குறேன். ஜூனியர் ஆர்டிஸ்ட்டா இருந்த போது கூட இவ்வளவு ரவுண்டு கட்டி வேலை பார்க்கலை.