வாஷிங்டன்,
அமெரிக்காவைச் சேர்ந்தவர் கிம்பர்லி க்ரோன். இவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இந்தப் பெண்ணிற்கு ஜூன் 2009-இல் தனது வீட்டிற்குள் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென அவரை மின்னல் தாக்கியுள்ளது. அதனால், அவருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சமையலறையின் கூரையில் இருந்த ஒரு விளக்கின் வழியாக ஊடுருவி, க்ரோன் சமைக்க வைத்திருந்த ஒரு எண்ணெய்க் கடாய் மீது தாக்கி அதை தூக்கி எரிந்தது. அதன் பிறகு, அதிலிருந்து வெளிப்பட்ட மின்னல் க்ரோனின் மார்பில் நேரடியாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் அதில் உயிர் பிழைத்துவிட்டார். இருப்பினும், இவரின் உடலில் சில காயங்கள் ஏற்பட்டன. இந்த மின்னலானது 1,200 மின்னல் ஸ்ட்ரைக்ஸ் கொண்டதாக அறியப்படுகிறது. தொடர்ந்து, 2 ஆண்டுகளுக்குப்பின் அவருக்கு ஒரு அசாதாரண திறன் கிடைத்துள்ளதாகவும் அதன் மூலம், புயல்கள் உருவாகும் முன்னரே அதை உணரும் திறன் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், புயல் மேகங்கள் சூழும் போது, க்ரோன் தனது மார்பு பகுதியில் இறுக்கமான உணர்வை பெறுவதாக குறிப்பிட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.