யாழ்ப்பாணம் வெத்தலக்கேணி மாமுனே கடற்பரப்பில் (16) இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது அனுமதி பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமான முறையில் சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டு (08) நபர்கள், நான்கு (04) டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கைது செய்யப்பட்டுள்ளன.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அனுமதி பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமான முறையில் சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டு (08) நபர்கள், நான்கு (04) டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கைது செய்யப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 48 வயதுக்குட்பட்ட திஹாரிய, வேப்பக்குளம், நச்சிக்குடா, வெட்டக்குளம், நொரோச்சோலை, பல்லெகுடா மற்றும் உதயகாட்டே ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 08 பேரும், 04 டிங்கி படகுகளும், சுழியோடி பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.