Actress Rashmika was cheated of Rs 80 lakh | நடிகை ராஷ்மிகாவிடம் ரூ.80 லட்சம் மோசடி

பெங்களூரு, பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம், அவரது மேலாளர், 80 லட்சம் ரூபாய் மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது.

கடந்த, 2016ல், கிரிக் பார்ட்டி என்ற கன்னடப் படம் வாயிலாக, அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா, 27. முதல் படமே வெற்றிகரமாக ஓடியதால், ராசியான நடிகை வரிசையில் இடம் பிடித்தார். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன.

பின், தெலுங்கு திரையுலகில் நுழைந்தார். இவர் நடித்த புஷ்பா படம், ஐந்து மொழிகளில் வெளியாகி பெரிய ‘ஹிட்’ படம் ஆனது. தற்போது புஷ்பா – 2 படத்தில் நடித்து வருகிறார். தமிழில் 2021ல் வெளிவந்த சுல்தான், 2023ல் வெளிவந்த வாரிசு படங்களிலும் நடித்துள்ளார். பாலிவுட்டிலும், பிரபல நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இதையடுத்து, சினிமா துறையில் கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் நடிகையரில் ராஷ்மிகாவும் ஒருவராக இருக்கிறார். இவர், திரையுலகில் நுழைந்த போது, கிரண், 45, என்பவரை மேலாளராக நியமித்திருந்தார். பணம் தொடர்பான அனைத்து விஷயங்களையும், இவரே நிர்வகித்து வந்தார்.

இந்நிலையில், ராஷ்மிகாவின் பணம் 80 லட்சம் ரூபாயை கிரண் மோசடி செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, ராஷ்மிகா அவர் மீது போலீசாரிடம் புகார் தெரிவிக்கவில்லை.

விஷயத்தை பெரிதாக்கவில்லை. பணத்தை எப்படி மோசடி செய்தார் என்பதையும் பகிரங்கப்படுத்தவில்லை. அதே நேரம், உடனடியாக கிரணை பணியில் இருந்து நீக்கி விட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.