ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Ajith Kumar, captain incident: கேப்டன் விஜயகாந்தை அஜித் குமார் கண் கலங்க வைத்த சம்பவம் குறித்து ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அஜித் குமார்சினிமா பின்னணி இல்லாமல் வந்து கோலிவுட்டன் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அஜித் குமார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். கோடிகளில் சம்பாதிக்கும் அஜித் பலருக்கு சத்தமில்லாமல் உதவி செய்து வருகிறார். தான் உதவி செய்வதை வெளியே சொல்லக் கூடாது என கூறிவிடுவார். இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த், அஜித் குமார் இடையே நடந்த சம்பவம் குறித்து தெரிய வந்துள்ளது.விஜய்”பெரியாரை பற்றி படியுங்கள்” நடிகர் விஜய் அட்வைஸ்!விஜயகாந்த் உத்தரவுநடிகர் சங்க தலைவராக இருந்தபோது பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினார் கேப்டன் விஜயகாந்த். அப்படி ஒரு கலை நிகழ்ச்சிக்கு அனைத்து நடிகர்களும், நடிகைகளும் வர வேண்டும் என்று கூறியிருந்தாராம். ஆனால் கேப்டன் அவ்வளவு கறாராக சொல்லியும் அஜித் குமார் மட்டும் வரவில்லையாம். நிகழ்ச்சி முடிந்த பிறகு வந்து விஜயகாந்தை சந்தித்திருக்கிறார் அஜித் குமார்.
Vijayakanth: தந்தையர் தினத்தில் விஜயகாந்துக்கு சூப்பர் பரிசு கொடுத்த மகன்கள்: கண்கலங்கும் ரசிகர்கள்பணத்துடன் வந்த அஜித்சாரி கேப்டன், என்னால் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. இந்த தொகையை ஏற்றுக் கொள்ளுங்கள் என பணம் கொடுத்திருக்கிறார் அஜித் குமார். அதை கேட்ட கேப்டனுக்கு கோபம் வந்துவிட்டதாம். அஜித் கொடுத்த பணத்தை வாங்கி வீசிவிட்டாராம். எல்லோரும் வருவாங்க, நீ மட்டும் வர மாட்டியா, பெரிய மனுஷனாக்கிட்டியோ என திட்டினாராம் விஜயகாந்த்.
Kamal Haasan: கமலுக்காக கெத்து வில்லனை தேர்வு செய்த ஹெச். வினோத்: ஆண்டவருக்கு ஏத்த ஆளு தான்
காயத்தை காட்டிய அஜித்கேப்டன் திட்டியபோது பொறுமையாக இருந்த அஜித் எதுவுமே சொல்லவில்லையாம். பதிலுக்கு தன் சட்டையை கழற்றி திரும்பி நின்று முதுகை காட்டினாராம். விபத்தில் காயம் அடைந்துவிட்டேன். இதனால் தான் கலை நிகழ்ச்சிக்கு வரவில்லை. என்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர் பாதிக்கப்படக் கூடாது என்று இந்த காயத்துடன் ஷூட்டிங் சென்று கொண்டிருக்கிறேன் என தன் பக்கத்து நியாயத்தை எடுத்துக் கூறினாராம் அஜித்.அழுத விஜயகாந்த்அஜித் குமாரின் முதுகை பார்த்த விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்தாராம். மேலும் கண் கலங்கியே விட்டாராம். கேப்டனுக்கு தான் இலகிய மனதாச்சே. அதனால் அஜித் பட்ட வேதனையை பார்த்து அழுதிருக்கிறார். மேலும் அஜித் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்து, பரவாயில்லப்பா நீ கிளம்பு என்றாராம். அப்பொழுது நடந்த சம்பவம் பற்றி தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
ரிஸ்க் எடுக்கும் அஜித்Vairamuthu: கலைஞர் இல்லா வீட்டிற்கு கண்ணீருடன் கிளம்பிய வைரமுத்து: திமுகவினர் ஆறுதல்படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்துகள், பைக் விபத்துகளில் அஜித் குமாருக்கு ஏகப்பட்ட காயம் ஏற்பட்டிருக்கிறது. அப்படி அவர் காயத்துடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டதை பார்த்து சக நடிகர்கள் அதிர்ச்சி அடைந்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது. உடம்பில் பல காயங்கள் ஏற்பட்டபோதிலும் சண்டை காட்சி என்று வந்தால் டூப் போட மாட்டேன் என்று கூறி ரிஸ்க் எடுத்து நடிக்கிறார் அஜித்.
விடாமுயற்சிகெரியரை பொறுத்தவரை மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார் அஜித். லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் அஜித் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறாராம். படப்பிடிப்பை அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார் மகிழ்திருமேனி. படப்பிடிப்பு முடிந்ததும் நவம்பர் மாதம் தன் பைக்கில் உலக டூர் கிளம்புகிறார் அஜித் குமார்.