ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Ajith next movie: தன்னை வைத்து தொடர்ந்து 4 படங்களை இயக்கிய சிறுத்தை சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க முடிவு செய்திருக்கிறாராம் அஜித் குமார்.
அஜித், சிவா கூட்டணிஅஜித்தை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்பது பல இயக்குநர்களின் கனவு. அப்படி இருக்கும்போது அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்களை இயக்கும் வாய்ப்பு சிறுத்தை சிவாவுக்கு கிடைத்தது. வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை இயக்கினார் சிவா. இதையடுத்தே அஜித்தின் பார்வை ஹெச். வினோத் பக்கம் திரும்பியது. இந்நிலையில் மீண்டும் சிவாவிடம் திரும்பிச் செல்ல முடிவு செய்திருக்கிறாராம் அஜித்.விஜய்”பெரியாரை பற்றி படியுங்கள்” நடிகர் விஜய் அட்வைஸ்!அடுத்த படம்அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை அடுத்து தான் நடிக்கவிருக்கும் படத்தை சிறுத்தை சிவா தான் இயக்க வேண்டும் என விரும்புகிறாராம் அஜித். சிவா, அஜித் மீண்டும் கூட்டணி சேரும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறதாம். அஜித் என்றாலே சிவா குஷியாகிவிடுவார். அதனால் அஜித் குமாருக்காக சூப்பரான கதை வைத்திருப்பார் என நம்பப்படுகிறது.
விடாமுயற்சி ஷூட்டிங்சிறுத்தை சிவா தற்போது சூர்யாவை வைத்து கங்குவா படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் தான் அவரை தேடி அஜித் பட வாய்ப்பு வந்திருக்கிறது. அஜித்தின் விடாமுயற்சி பட ஷூட்டிங் ஜூன் முதல் வாரம் துவங்கும் என்றார்கள். இந்நிலையில் அடுத்த மாதம் தான் படப்பிடிப்பை துவங்கப் போகிறாராம் மகிழ்திருமேனி.
அஜித்துக்கு வில்லன்Vidaa Muyarchi:விடாமுயற்சியில் அவர் மட்டும் அஜித்துக்கு வில்லனாக நடித்தால் அது தான் தரமான சம்பவம்விடாமுயற்சி படத்தில் அஜித் குமாருக்கு வில்லனாக நடிக்க அர்ஜுன் தாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளாராம். ஆனால் அவர் முக்கிய வில்லனாக இருக்க மாட்டார் என நம்பப்படுகிறது. இந்நிலையில் அஜித் குமாருக்கு வில்லனாக நீங்களே நடிக்க வேண்டியது தானே மகிழ்திருமேனி என ரசிகர்கள் ஐடியா கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கையை மகிழ்திருமேனி ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
சண்டை காட்சிவிடாமுயற்சி படத்தில் வரும் சண்டை காட்சியை தான் முதலில் படமாக்க திட்டமிட்டுள்ளாராம் மகிழ்திருமேனி. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் படப்பிடிப்பு துவங்குமாம். விடாமுயற்சி படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் பேசியிருக்கிறார்களாம். அவரும் நான் நடிக்கிறேன் என பச்சைக்கொடி காட்டிவிட்டாராம்.
ரசிகர்கள் கவலைவிடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே போவது அஜித் ரசிகர்களை கவலை அடைய வைத்திருக்கிறது. இதற்கிடையே விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக வதந்தி வேறு பரவியது. படம் கைவிடப்படவில்லை. படப்பிடிப்பு மட்டுமே தாமதமாகியிருக்கிறது. விடாமுயற்சிக்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.
Vijay: விஜய் சொன்ன அம்பேத்கர், பெரியார், காமராஜருடன் அண்ணாவையும் படிக்க வேண்டும்: வெற்றிமாறன்உலக டூர் திட்டம்விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்த பிறகு வரும் நவம்பர் மாதம் தன் ஸ்போர்ட்ஸ் பைக்கில் உலக டூர் கிளம்பவிருக்கிறார் அஜித் குமார். அந்த பயணத்திற்கு பரஸ்பர மரியாதை பயணம் என பெயர் வைத்திருக்கிறார். படப்பிடிப்பு தள்ளிப் போவதால் அஜித்தின் உலக டூர் திட்டமும் பாதிக்கப்படுமோ என பேச்சு கிளம்பியிருக்கிறது. விடாமுயற்சி படப்பிடிப்புக்கு முன்பு நேபாளம், சிக்கிமுக்கு பைக்கில் சென்றுவிட்டு ஊர் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த் திட்டினார்அஜித் பற்றி தற்போது ஒரு விஷயம் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. நடிகர் சங்க கலைநிகழ்ச்சிக்கு வராத அஜித் குமாரை கேப்டன் விஜயகாந்த் திட்டியதாகவும், அதற்கு ஏ.கே. தன் சட்டையை கழற்றி முதுகில் இருந்த காயத்தை காட்டியதாகவும் பேசப்படுகிறது. அஜித் குமார் முதுகை பார்த்த கேப்டன் அதிர்ச்சி அடைந்து அழுதுவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
Ajith: கிழி கிழினு கிழிச்ச விஜயகாந்த், முதுகை காட்டிய அஜித், உடனே அழுத கேப்டன்