தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக வலம் வருபவர் சின்மயி. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு இவர், பல பிரச்சனைகளுக்கு எதிராக தனது கருத்துக்களை தொடர்ச்சியாக பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் சின்மயி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தமிழ் சினிமாவில் ஏ.ஆர். ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், டி. இமான் போன்ற பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார் சின்மயி. மேலும் பல பிரபல நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
சின்மயி கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கடந்தாண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தது. சின்மயி கர்ப்பமாக இருப்பதை அறிவிக்காததால், அவர் வாடைத்தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டதாக சர்ச்சைகள் எழுந்தன.
Adipurush: நெகட்டிவ் விமர்சனங்களுக்கு மத்தியில் குவியும் வசூல்: மூன்று நாட்களில் இத்தனை கோடியா..!
ஆனால் சின்மயி இதனை மறுத்து, தான் கர்ப்பமாக இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டார். .இந்நிலையில் நேற்றைய தினம் தனது இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சின்மயி.
View this post on InstagramA post shared by Chinmayi Sripada (@chinmayisripaada)
இதுவரை தனது குழந்தைகளின் முகத்தை யாருக்கும் காட்டாமல் இருந்தவர், முதன்முறையாக தனது இரட்டை குழந்தைகளின் முழு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து சின்மயி பகிர்ந்துள்ள இரட்டை குழந்தைகளின் புகைப்படங்களுக்கு லைக்குகளும், கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.
Kajal Aggarwal: என்னை கொன்னுடுவாங்க: பிறந்தநாள் அதுவுமா அதிர்ச்சி கொடுத்த காஜல் அகர்வால்.!