ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
எதிர்பார்ப்பில் ஜெயிலர்ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே தான் இருக்கின்றது. நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் ஒரு மல்டி ஸ்டாரர் படமாக ஜெயிலர் உருவாகியுள்ளது.. மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதையடுத்து ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி இப்படம் திரையில் வெளியாகவுள்ளது. இதையொட்டி அடுத்த மாதம் ஜெயிலர் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகவுள்ளது
முக்கியமான படம்நெல்சனின் இயக்கத்தில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே சந்தித்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான அப்படம் சொதப்பியதால் நெல்சன் பல ட்ரோல்களுக்கு ஆளானார். இதையடுத்து அவர் ஜெயிலர் படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பும் கட்டாயத்தில் இருக்கின்றார். மறுபக்கம் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கும் ஜெயிலர் மிக முக்கியமான படமாகவே இருக்கும். ஏனென்றால் அவரது நடிப்பில் கடைசியாக வெளியான சில படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை. எனவே ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் ரஜினி வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் இருக்கின்றார். இதைத்தொடர்ந்து ஜெயிலர் திரைப்படம் ரஜினி மற்றும் நெல்சன் இருவருக்கும் முக்கியமான படமாக இருக்கும்
திருப்தியில் தலைவர்தற்போது ரஜினி ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு முழு திருப்தியுடன் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் இருக்கும் பல இடங்களில் லைவ் லொகேஷனில் நடைபெற்றது. இதையடுத்து தற்போது ஒருவழியாக ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் ஜெயிலர் படத்தை பார்த்த ரஜினிக்கு இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை பெரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாம். ஜெயிலர் படத்தினால் முழு திருப்தியில் இருக்கிறாராம் ரஜினி. மேலும் ஜெயிலர் படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் படத்தின் மீதி முழு நம்பிக்கையில் இருப்பது குறிப்பிடத்தக்கது
முதல் விமர்சனம்இந்நிலையில் ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் வசந்த் ரவி சமீபத்தில் படத்தை பற்றி பேசியுள்ளார். அவர் பேசியதாவது, ரஜினி இதுவரை 168 படத்தில் நடித்துள்ளார். ஆனால் ஜெயிலர் திரைப்படம் ரஜினியின் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வித்யாசமான படமாக கண்டிப்பாக இருக்கும். படம் நன்றாக வந்துள்ளது, கண்டிப்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். மொத்தத்தில் படம் வேற மாதிரி இருக்கும் என வசந்த் ரவி கூறியுள்ளார். இந்நிலையில் வசந்த ரவி மட்டுமல்லாமல் ஜெயிலர் படத்தில் நடித்துள்ள ஒரு சில நடிகர்கள் படத்தை பற்றி பாஸிட்டிவாகவே கூறி வருகின்றனர். மேலும் கோலிவுட் வட்டாரத்திலும் படத்தை பற்றி பாசிட்டிவ் டாக் இருந்து வருவதால் இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது