
ஆனைகட்டி அருகேயுள்ள சேம்புக்கரையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானை உயிரிழப்பு. கோயமுத்தூர் வனத்துறை விசாரணை.

தொடர் கனமழையால் சென்னை கிண்டி கத்திப்பாரா சுரங்கப்பாதையில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் சார்பில், திருச்சியில் நடைபெற்ற உற்பத்தியாளர் சந்தையாளர் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 17-வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ரவி தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

அரசுப் பள்ளிகளை ஆய்வுசெய்த கவர்னர் தமிழிசை, பள்ளி மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

“லால் சலாம்” படபிடிப்புக்காக புதுச்சேரி வந்த நடிகர் ரஜினியை சபாநாயகர் செல்வம் வரவேற்றார்.

நெல்லை சந்திப்பு தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஏரல் பேருராட்சி, கணேசபுரம் பகுதியில், பழங்குடியின மக்கள் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பைத் தொடர சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

போலீஸார் தாக்கியதாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடந்தது.

இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், 4 பேர் பலி, 80-க்கும் மேற்பட்டோர் காயம்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலகச் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

நெல்லை சந்திப்பு பழைய பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர், மேயர் உள்ளிட்டோர் ஆய்வுசெய்தனர்.

உத்திரகோசமங்கை ஸ்ரீ மங்கள நாத சுவாமி கோயில் பிரம்ம தீர்த்தத்தில், மர்மமான முறையில் செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணியில் பணியாளர்கள்.

மழையால் விமான நிலையம் மேம்பாலத்தில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தலைமையில் போதைக்கு எதிராக தோல்பாவைக்கூத்து திரையிடல் மூலம் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

போதைக்கு எதிராக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் ஆகியோர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.8.16 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.

ரங்கம் பாளையம் கொங்கு கல்வி நிலையத்தில் ப்ளஸ் டூ துணைத் தேர்வு தொடங்கியது. அதனை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குழந்தைராஜன் பார்வையிட்டார்.

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில், தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவர் பாண்டி யாசகமாகப் பெற்ற ரூ.10,000-ஐ ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியுதவியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

தொடர் மழையால் வியாசர்பாடி ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கிய மழை நீர்.

கனமழை காரணாமாக பட்டாளம் பகுதியைச் சூழ்ந்த மழை நீர்.

மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஜெம் மருத்துவனனையில் சிறப்பு மருத்துவ முகாமை மேயர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மாதர் சங்க அமைப்பினர் குடியிருப்பு பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு கொடுத்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்த காவலர்.