விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘லியோ’ படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் தன்னுடைய பாணியில் பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக இதனை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் ‘லியோ’ படம் குறித்து தற்போதைய பேட்டியில் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
கடந்த ஜனவரி மாதம் விஜய் நடிப்பில் ‘வாரிசு’ படம் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழியில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் பேமிலி டிராமாவாக இந்தப்படம் வெளியானது. வசூலில் ‘வாரிசு’ படம் மாஸ் காட்டினாலும் விஜய் ரசிகர்களுக்கு ‘வாரிசு’ படம் ஏமாற்றத்தை அளித்தது. இதனால் விஜய் தற்போது நடித்து வரும் லியோவை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
‘விக்ரம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் லியோவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் ‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணி இணைந்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் ‘லியோ’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஒரு மாதங்களுக்கு மேலாக காஷ்மீரில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட ஷுட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நா ரெடி’ என்ற பாடலை வரும் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடவுள்ளனர் படக்குழுவினர். இந்தப்பாடலை விஜய் பாடியுள்ளதாக கூறப்படுகிறது.
Chinmayi: முதன்முறையாக.. ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி அளித்த சின்மயி: குவியும் வாழ்த்துக்கள்.!
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்கும் வகையில் அந்த சர்ப்ரைஸ் இருக்கும் எனவும் கூறியுள்ளார். இதனால் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள். அந்த சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் இப்போது மண்டையை பிய்த்து கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.
மேலும், இன்னும் பத்து நாட்களில் விஜய்யின் போர்ஷன் முடிவடைந்து விடும் என்றும் இந்தப்படத்தில் அவர் தனக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாகவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். ‘லியோ’ படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், திரிஷா, மிஷ்கின், கெளதம் மேனன், அர்ஜுன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ‘லியோ’ படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Adipurush: நெகட்டிவ் விமர்சனங்களுக்கு மத்தியில் குவியும் வசூல்: மூன்று நாட்களில் இத்தனை கோடியா..!