ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகின்றார் இப்படம் ஏற்படுத்தியிருக்கும் எதிர்பார்ப்பை பற்றி அனைவரும் தெரியும். உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் அக்டோபர் மாதம் திரையில் வெளியாகவுள்ளது. இருந்தாலும் கடந்த எட்டு மாதகாலமாக இப்படத்தை பற்றிய பேச்சு தான் பரவலாக போய்க்கொண்டிருக்கிறது.
கடந்த ஒரு வருடத்தில் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் டாபிக்காக லியோ தான் இருந்து வருகின்றது. அதற்கு மிக முக்கிய காரணம் விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணி தான். இவர்கள் இதற்கு முன்பு இணைந்த மாஸ்டர் படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பை விட லியோவிற்கு பல மடங்கு எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
Jailer update: தளபதிக்கு போட்டியாக களமிறங்கும் தலைவர்..வெளியான வெறித்தனமான அப்டேட் இதோ..!
படம் வெளியாகும் முன்பே தயாரிப்பாளருக்கு பலகோடி லாபத்தை ஈட்டியள்ளது லியோ. இதையடுத்து லியோ வெளியான பிறகு ஆயிரம் கோடி வசூலை பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் ஒரு பேட்டியில் லியோ படத்தை பற்றி பல விஷயங்களை பேசியுள்ளார்.
நா ரெடி பாடல்
அதில் அவர் காஷ்மீரில் கடுமையான சூழலில் படப்பிடிப்பை நடத்தியதை பற்றியும், விஜய்யின் ஒத்துழைப்பை பற்றியும் பேசியுள்ளார் லலித். அவர் கூறியதாவது, காஷ்மீரில் கடுமையான குளிரில் லியோ முதல்கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். முதல் முறையாக காஷ்மீரில் படப்பிடிப்பு தளத்தில் இறங்கிய போது விஜய், இங்கே ஷூட்டிங் பண்ணுவீங்களா ? இல்லை கேன்சல் பண்ணிட்டு போய்டுவோமா ? என கேட்டார்.
அந்த அளவிற்கு காஷ்மீரில் பனிப்பொழிவு இருந்தது. இதையடுத்து விஜய்யின் ஒத்துழைப்பு மிக அருமையாக இருந்தது. அந்த குளிரிலும் சண்டை காட்சியில் அசால்டாக நடித்தார் விஜய். மேலும் ஹோட்டலுக்கு செல்லும் போது ஒருமுறை கார் நின்றுவிட்டது. எனவே விஜய் அனைவருடனும் சேர்ந்து காரை தள்ளி உதவினார். மிகவும் எளிமையாக நடந்துகொண்டார் விஜய் என பேசியுள்ளார் லலித்.
விஜய்யின் ஒத்துழைப்பு பற்றி லலித்
இது மட்டுமல்லாமல் காஷ்மீர் படப்பிடிப்பில் பணிபுரிந்த அனைத்து படக்குழுவினரையும் மனதார பாராட்டிய விஜய், இவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். எனவே தான் அவர்களுக்கு சமர்ப்பிக்கும் வகையில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டோம். அந்த வீடியோ வெளியிட முழு காரணம் தளபதி தான் என் பேசியுள்ளார் லலித்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதியில் லியோ படத்தில் இடம்பெறும் நா ரெடி என்ற பாடல் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.