ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகின்றது. விக்ரம் என்ற மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கும் படம் லியோ என்பதாலும், விஜய் மற்றும் லோகேஷின் கூட்டணி என்பதாலும் இப்படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
கடந்த ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியதை அடுத்து தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் லியோ படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை மிகப்பிரமாண்டமான முறையில் படமாக்கினார் லோகேஷ்.
விஜய்யிடம் மன்னிப்பு
ஒரு வாரம் எடுக்கப்பட்ட இப்பாடலின் படப்பிடிப்பில் கிட்டத்தட்ட 2000 நடன கலைஞர்கள் நடனமாடியுள்ளனர். மேலும் விஜய்யுடன் இப்பாடலில் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான், மடோனா செபாஸ்டியன் ஆகியோரும் நடனமாடியுள்ளார். நா ரெடி என துவங்கும் இப்பாடல் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
Leo: ஷூட்டிங் பண்ணலாமா ? இல்லை கேன்சல் பண்ணிட்டு போய்டலாமா ?விஜய் கேட்ட கேள்வி..ஷாக்கான படக்குழு..!
இந்நிலையில் இன்னும் பத்து நாட்களில் லியோ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என்றும், அதன் பிறகு போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு லியோ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்க மறுபக்கம் லோகேஷ் கிடைக்கும் நேரங்களில் பேட்டிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் என கலந்துகொண்டு வருகின்றார்.
லோகேஷ் விருப்பம்
அது போல சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டுள்ள லோகேஷ் லியோ பற்றியும் விஜய்யை பற்றியும் பல விஷயங்களை பேசியுள்ளார். அதில் அவர் விஜய்யிடம் நான் ஒரு விஷயத்திற்காக மன்னிப்பு கேட்க விரும்புவதாக தெரிவித்தார் லோகேஷ்.
அதாவது ஷூட்டிங் சமயங்களில் சில நேரம் வெளியே இதுபோல பேட்டிகளுக்கோ, பொது நிகழ்ச்சிகளுக்கோ சென்று விடுவேன். அந்த சமயத்தில் தளபதி ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்காக சில நிமிடங்கள் காத்திருப்பார். எனவே அதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்க நினைக்கின்றேன் என்றார் லோகேஷ். இதையடுத்து தற்போது இவர் பேசிய விஷயங்கள் தான் இணையத்தில் ட்ரெண்டாக மாறியுள்ளது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
மேலும் லோகேஷ் பத்து படங்கள் இயக்கியதற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். இது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாகவே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.