Modi visit: Congratulatory slogans started in America | மோடி வருகை: அமெரிக்காவில் துவங்கியது வாழ்த்து கோஷம்

வாஷிங்டன்: பிரதமர் மோடி வருகையை எதிர்ப்பார்த்து, அமெரிக்காவில் வாழும் இந்திய வாழ் மக்கள் மட்டுமின்றி, அமெரிக்க மக்களும் கையில் பிரதமர் மோடி புகைப்படங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்திய படி, ஆங்காங்கே பேரணியாக சென்று வருகின்றனர். மோடி, மோடி என வாழ்த்து கோஷம் எழுப்பினர். பல பெண்கள் விசில் அடித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

இந்தியாவில் இருந்து வரும் 20ம் தேதி புறப்படும் பிரதமர் மோடி, 21ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா கொண்டாட்டங்களில் பங்கேற்க உள்ளார். அதன் பிறகு, அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் செல்லும் பிரதமர் மோடிக்கு, 22ம் தேதி வெள்ளை மாளிகையில் அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இதனையடுத்து, அதிபர் ஜோ பைடனைச் சந்திக்கும் பிரதமர் மோடி, அவருடன் இரு தரப்பு உறவு தொடர்பாக கலந்துரையாடுகிறார். பிரதமர் மோடியை கவுரவிக்கும் விதமாக அன்றைய தினம் அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் இரவு விருந்து அளிக்க உள்ளனர். இதையடுத்து அமெரிக்க பார்லி மென்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடி வருகையை எதிர்ப்பார்த்து, அமெரிக்காவில் வாழும் இந்திய வாழ் மக்கள் மட்டுமின்றி, அமெரிக்க மக்களும் கையில் பிரதமர் மோடி புகைப்படங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்திய படி, ஆங்காங்கே வாழ்த்து கோஷம் எழுப்பி வருகின்றனர். மேலும், அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை உட்பட பல்வேறு நகரங்களில் பிரதமர் வருகையை எதிர்ப்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர்.

latest tamil news

பிரதமர் அமெரிக்க பயணம்: முக்கிய மைல் கல்

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் வினய் குவாத்ரா கூறுகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரதமர் ஜூன் 21 முதல் 23 வரை அமெரிக்கா செல்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணம் இரு நாடுகளின் நல்லுறவில் ஒரு மிக முக்கிய மைல்கல்லாக அமையும். இரு நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு என்பது பிரதமரின் அமெரிக்க பயணத்தின் போது மிக முக்கியமான விசயமாக அமையும். இது பிரதமரின் முதல் அதிகாரப்பூர்வ அமெரிக்க அரசுப் பயணம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.