குவஹாத்தி, அசாமில், நேற்று முன்தினம் இரவு துவங்கி நேற்று முழுதும் கனமழை கொட்டி தீர்த்ததை அடுத்து, பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
பல்வேறு பகுதிகளுக்கும், ‘ரெட் அலெர்ட்’ விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், வரும் வியாழன் வரை கனமழை முதல் தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமில் வரும் வியாழன் வரை தீவிர மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் மணிக்கு 7 – 11 செ.மீ., வரை கனமழையும், 20 – 24 செ.மீ., வரை தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாவட்டங்களுக்கும், ‘ரெட் அலெர்ட்’ எனப்படும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு துவங்கி நேற்று முழுதும் பெய்த கனமழைால், சச்சார், தர்ராங், தேமாஜி, திப்ருகர், கோலாகட், ஹோஜாய், லக்கிம்பூர், நாகோன், நல்பாரி சோனிட்புர், டின்சுகியா, உடல்குரி மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதன் காரணமாக, 33,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,510 ஹெக்டேர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.
மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கரிம்கஞ்ச், திமா ஹசோ உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளும் சேதம் அடைந்துள்ளன.
பிரம்மபுத்ராவின் கிளை நதிகள் பல்வேறு இடங்களில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்