ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியரை கவுரவித்தார் தளபதி விஜய். சென்னையில் நடந்த அந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், தனுஷின் அசுரன் பட வசனத்தை பயன்படுத்தினார்.
“பெரியாரை பற்றி படியுங்கள்” நடிகர் விஜய் அட்வைஸ்!
விஜய் கூறியதாவது, இந்த நிகழ்ச்சியை நான் ஏற்பாடு செய்ய சமீபத்தில் நான் கேட்ட ஒரு படத்தின் வசனம் தான் காரணம். காடு இருந்தால் எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடுங்கிடுவானுவ, ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது என்கிற அந்த வசனம் என்னை கவர்ந்தது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அது நூற்றுக்கு நூறு உண்மை மற்றும் யதார்த்தமான வசனம். அப்படி முக்கியத்துவம் வாய்ந்தது கல்வி. அதனால் தான் என் தரப்பில் ஏதாவது செய்யணும் என்று நினைத்தேன். அதற்கான நேரம் இது. அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து மாணவ, மாணவியர் படிக்க வேணடும் என்றார் விஜய்.
அசுரன் படத்தில் தன் மகனிடம் தனுஷ் பேசிய வசனத்தை விஜய் பயன்படுத்தியதை பார்த்த சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்நிலையில் இது குறித்து அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது,
சினிமாவில் நாம் சொல்லும் விஷயம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒருவரை அடையும்போது அதனுடைய நேர்மறையான வெளிப்பாடு என்னவாக இருக்கும் என்பதற்கு இதை ஒரு பெரிய உதாரணமாக பார்க்கிறேன் என்றார்.
அம்பேத்கர், காமராஜர், பெரியார் குறித்து படிக்கச் சொல்லியிருக்கிறாரே விஜய். அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என வெற்றிமாறனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, நம் வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா?. அம்பேத்கர், பெரியார், காமராஜருடன் அண்ணாவையும் படிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன் என்றார்.
Vijay: 12 மணிநேரம் கால் கடுக்க நின்ற விஜய்: ஸ்மைல், கண்ணீர், தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தளபதி
காலை 11 மணி முதல் இரவு 11.20 மணி வரை நடந்த அந்த நிகழ்ச்சியில் சுமார் 1,600 மாணவ, மாணவியர் கலந்து கொண்டார்கள். மேடைக்கு வந்த மாணவ, மாணவியர் சான்றிதழ், ஊக்கத்தொகையை வாங்கிக் கொண்டு கிளம்பிவிடவில்லை.
ஒரு மாணவியுடன் வந்த குட்டிப் பெண் விஜய்யின் கன்னத்தை பிடித்து கிள்ளினார். ஒரு மாணவியின் அப்பா விஜய்யின் காலில் விழுந்தார். சில மாணவிகள் விஜய்யை பார்த்ததும் அண்ணா என பாசமாக ஹக் செய்தார்கள்.
தொடர்ந்து 12 மணிநேரம் மேடையில் நின்றதால் விஜய் சோர்வடைந்தார். ஒரு கட்டத்தில் கால் வலி தாங்க முடியாமல் மேஜையில் சாய்ந்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது.
கடைசியில் ரஞ்சிதமே ஸ்டைலில் முத்தம் கொடுத்து நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார். இதற்கிடையே நிகழ்ச்சி வந்திருந்த ஒரு மாணவியின் தந்தை விஜய்க்கு அன்பு கோரிக்கை விடுத்தார்.
விஜய் பேசக் கூடாதுனு சொல்லியும் அதை மேடையில் பேசிய மாணவியின் அப்பா: பத்த வச்சிட்டியே பரட்டை
அதாவது பள்ளி மாணவ, மாணவியரை போன்றே கல்லூரி மாணவ, மாணவியரையும் கவுரவிக்க வேண்டும். அப்படி செய்தால் நீங்கள் நினைத்தது நடக்கும் என்றார். அரசியலுக்கு வரும் நோக்கத்தில் இருக்கிறார் விஜய். தற்போது 18 வயதுக்குட்பட்டோரை கவுரவித்துள்ளார். 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஓட்டுரிமை உள்ளது என்பதால் அவர்களை கவுரவித்தால் கை கொடுக்கும் என்பதையே அந்த மாணவியின் தந்தை சூசகமாக சொல்லியிருக்கிறார்.